பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 51 இங்ங்ணம் கவிஞரின் சாட்டைச் சொடுக்கு நீண்டு செல்கிறது. திருமணத்தின் மேளம் கொட்டுகிறது; முழக்கம் காதைச் செவிடாக்குகின்றது. பட்டுப் படுபடெனத் தட்டுக் கெடுகெடெனக் கெட்டுக் கிடகிடெனக் கெட்டிமே ளம்முழங்கும் எனக் கவிஞர் ஒலிக் குறிப்பு மொழியாட்சியால் படிப்போர் வாயினுள்ளேயே மேளமுழக்கம் நி க ழ் த் த ச் செய்து விடுகின்ருர். கொண்ட மனையாளை விடுத்து கண்ட பெண்களின் பின்னே சுற்றிக் காதல் செய்யும் கயவனுக்குப் புத்தி புகட்டும் நீதியைக் கொண்டது இனிய பாதி’ என்னும் கதை. சந்த இனிமை பயின்ற கலிவெண்பா யாப்பில் கவிஞரின் கற்பனையோட்டம் இங்குத் துள்ளாட்டம் போடு கின்றது. ஊரவர் கெளவை எருவாக, அன்ன சொல் நீராக மாலை மலரும் இந்நோய்' என்று வள்ளுவர் கூறும் காதல் நோய்ப் பயிர்க் காட்சியைக் கருத்திலிருத்தி பார்வை தொடக்கிவைத்த பாசம் உரையாடல் நீரால் வளர்ந்து நெடும்பயிராய் முற்றி உளங்கலக்கும் காதல் உருவெடுத்து நாளும் வளம்பெற் றுயர்ந்து வளர்ந்து செழித்ததுவாம் எனவரும் காதல் பயிர்க்காட்சியைக் கவிஞர் காட்டுகின்ருர். கங்கையில் மூழ்கிய கன்னியொருத்தின்யக் 'காத்தான் ஒருவன்; காத்தவன் ‘புலையன் ஆதலால் அவனுக்குத் தண்டனை வழங்கியது உயர்மட்ட சாதி; பொங்கியெழுந் தான் புலேயன்; அந்நிலையில் ‘புலையனே’ப் புத்தர் அரவணைத்