பக்கம்:நாடகக் கலை 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 காடகக் கலை. கோவையில் என் நண்பர் ஒருவர் தம் புதல்விக்குத் திருமணம் கடத்தினர். தாலி கட்டும் நேரத்தில் மன மகனின் தந்தைக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது. மணமகள் போட்டிருப்பதெல்லாம் அசல் நகைகளா "கில்ட்' நகைகளாவென்று சம்பந்திகளுக்குள் தகராறு, ஏற்பட்டது. கடைசியாக நகைகளைச் சோதித்துப்பார்க காமல் தாலி கட்டக் கூடாதென்று மணமகனுக்குக் கட்ட8ள பிறப்பித்து விட்டார் அவர் தந்தை. மன மகளின் தந்தைக்கு மானம் பெரிதாகத் தோன்றியது. இப்படிப்பட்ட மணமகனுக்குத் தம் புதல்வியைக் கொடுக்க அவர் மனம் இசையவில்லை. தகராறு வளர்ந் தது. மணமகன் தந்தையோடு வெளியே கிளமபினுர். அவ்வளவுதான்; மணமகளின் தந்தை தன் கடையில் வேலை செய்யும் குமாஸ்தா ஒருவரைப் புது ஆடைகள் உடுத்தச் செய்து மணமகனுக்கி அவருக்கே தம் புதல் வியை மணஞ்செய்து கொடுத்தார். திருமணம் எல்லாம் முடிந்த பிறகு அந்த நண்பர் விவரமாக எனக்குக் கடிதம் எழுதினர். 'நீங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் வர தட்சணை அதிகம் கேட்ட சம்பந்திகளை வெளியே அனுப்பிவிட்டு கானே மணமகன்’ என்று சொல்லி, திரெளபதியின் கழுத்தில் தாலி கட்டுவீர்களே; அந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. துணிவோடு என் கடையிலிருந்த குமாஸ்தாவுக்கே என் மகளை மண முடித்துவிட்டேன். இந்தப் பெருமைகளெல்லாம் உங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைச் சேர்ந்தது' என்று எழுதியிருந்தார். நாடகத்தால் விளைந்த நற்பயனைப் பார்த்தீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/146&oldid=1322692" இலிருந்து மீள்விக்கப்பட்டது