பக்கம்:நாடகக் கலை 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாடகக் கலை சீதக்காதி கொண்டி காடகம் இவ்வாறு பலவகைப்பட்ட கொண்டி நாடகங்கள். பெரும்பாலும் இந்த கொண்டி நாடகத்திற்குரிய கதைப்போக்கு வருமாறு : • "கதாநாயகன் தீயவனுக இருந்து காமுகன் வலை யில் சிக்கி, பிறகு தண்டனைக்குட்பட்டு அவயவங்களை இழந்தவனகி, கொண்டியாய் ஒரு தெய்வத்தை வேண்டி வழிபட, இழந்த அவயவங்களை மீண்டும் பெறுகிறன்' என்பதே. ஏறக்குறைய எல்லா கொண்டி காடகங்களும் இம்மாதிரியாகவே இருக்கும். கோபாலகிருஷ்ண பாரதியாரின் கந்தனர் சரித்திரக் கீர்த்தனையைப்பற்றி நமக்கெல்லாம் நன்ருகத் தெரியும். இதில் வரும் கீர்த்தனைகள் நாடக மேடையில் பல நடிகர் களால் பாடப் பெற்றவை; இன்னும் கதா காலட்சேபங் களில் பாடப்பெற்று வருபவை. இரணிய சங்கார நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், காத்தவராயன் நாடகம், பாண்டவர் சூதாட்ட நாடகம், வள்ளியம்மை நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் இவ்வாறு பல்வேறு நாடகங்கள் பெரும்பாலும் பாடல்களாகவும் ஒருசிறிது கட்டியக் காரன் வசனத்தோடு கூடியதாகவும் அமைந்திருக் கின்றன. விலாசங்கள் இத்தகைய நாடக காலத்திற்குப் பிறகு நாடகத் திற்கு விலாசம் என்று பெயரிட்டுப் பல விலாசங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன. பாரத விலாசம், சகுந்தலை விலாசம், மதன சுந்தரப் பிரசாத சந்தான வினைசம், மதுரைவீரன் விலாசம், சித்திராங்கி விலாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/31&oldid=1322561" இலிருந்து மீள்விக்கப்பட்டது