பக்கம்:நாடகக் கலை 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காடக வரலாறு 39 பேசத் தெரிந்த கடிகர் அவரைத் தாறுமாருன கேள்விகள் கேட்டுத் திக்குமுக்காடவைத்துச் சபை யோரின் கைதட்ட8லப்பெறுவார். கடிகர்கள் இருவரும் பேசத் தெரிந்தவர்களாக இருந்துவிட்டால் சில சமயங் களில் போட்டி வலுத்துவிடும். நீண்ட நேரம் வாதம் கடைபெறும். கடிகர்கள் கதையைவிட்டு வெகு தூரம் விலகிப் போய் உலாவிக் கொண்டிருப்பார்கள்! சொந்த விவகாரங்கள் எல்லாம் அம்பலத்துக்கு வரும். "பூத்தொடுப்பதுபோல் பேசுகிறீரே?' என்று பெண் வேட கடிகர் பேசுவார். அந்தப் பேச்சின் மூலம் ஆண் வேட கடிகர் பூத்தொடுக்கும் குலம் என்பதைக் குத்திக் காட்டுவார். சபையில் கைதட்டல் ஏற்படும். ஆண் வேடதாரியும் ச8ளக்காமல் "உன் பேச்சு சன்னம் வைத்து இழைப்பது போல் இருக்கிறதே!” என்று கூறி, பெண் வேடதாரி ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை நினைவுபடுத்துவார். உடனே சபையில் இவருக்கும் கைதட்டல் உரையாடல் இப்படியே போய்ப் பின்னிக் கொண்டிருக்கும். சொற் போர் வலுத்து, கடைசியாகச் சபையோர் சிலர் நாடகக் கதையை ஞாபகப்படுத்த வேண்டிய நிலைமை ஏற் பட்டதும் உண்டு. இப்படியெல்லாம் நடிகர்கள் கற்பனையாகப் பேசிக் கட்டுப்பாடு இல்லாதிருந்த காலையில், காடகத்தைத் தொழிலாகக் கொண்ட நாடக சபைகளுக்கு ஒழுங்காக உரையாடல்கள் எழுதிக் கொடுத்து, காடகப் பேச்சு முறையை வகுத்த பெரியார் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளே ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/41&oldid=1322572" இலிருந்து மீள்விக்கப்பட்டது