பக்கம்:நாடகக் கலை 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 காடகக்கலை பாலர் நாடக சபைகள் பெரிய நடிகர்களிடம் இந்தக் கட்டுப்பாடு சீர் குலைந்து போகவேதான் சுவாமிகள் பாலர் நாடக சபை களைத் தோற்றுவிக்க நேர்ந்தது. இவ்வாறு தோன்றிய சபைதான் சமரச சன்மார்க்க நாடக சபை. இக் காடக சபையை, சங்கரதாஸ் சுவாமிகள் தம் சொந்தத்திலேயே 1910-ஆம் ஆண்டில் தொடங்கிர்ை. இச் சபையிலே தான் இசைப் பெரும்புலவர் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும், சங்கீத மேதை திரு. எஸ். ஜி. கிட்டப்பா அவர்களும, அவருடைய சகோதரர்களும் நடிகர்களாக விளங்கினர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல நாடக சபைகள் தோன்றின. இவற்றிலெல்லாம் சிறுவர்களே கடிகர்கள். மதுரை பால் மீன ரஞ்சனி சங்கீத சபை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, மதுரை தத்துவ மீன லோசனி வித்துவ பாலசபா முதலிய சபைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. தமிழ் நாடகக் கலையை வளர்த்த பெருமையில் முக்கிய இடம்பெறக் கூடியவர்கள் பாலர் நாடக சபை யினர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி காடகங்கள் பலவற்றை கான் பார்த்திருக்கிறேன். திரைப்பட கட் சத்திரங்களான திருவாளர்கள், எம். ஜி. சக்கரபாணி, எம். ஜி. ராமச்சந்திரன், காளி என். ரத்தினம், பி. யு. சின்னப்பா,மற்றும் கே. பி. காமாட்சி, கே. பி. கேசவன், எம். கே. ராதா, பக்கிரிசாமி பிள்ளை, எம். ஜி. தண்ட பாணி, டி. ஆர். பி. ராவ் முதலிய கடிகர்கள் பலர் இந்த நாடக சபையிலே பயிற்சி பெற்றவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/42&oldid=1322573" இலிருந்து மீள்விக்கப்பட்டது