பக்கம்:நாடகக் கலை 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 5.1% கனனையா கண்ட காட்சிப் புதுமை காட்சி அமைப்பு முறையிலே தமிழ் நாடக உலகில் மகத்தான மாறுதலை உண்டாக்கியவர் திரு.சி. கன்னயா அவர்களாவார். இவரது தசாவதாரம் ஆண்டாள். பகவத் கீதை முதலிய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன் சபையோர் பிரமிப்படையும் முறையில் பிரம்மாண்ட மான காட்சிகளைப் பெரும் பொருட் செலவில் தயாரித்த பெருமை சி. கன்னையா அவர்களுக்கே உரியது. விளம்பரங்கள் செய்வதில் இவர்-மிகத் திறம்ை யானவர். சென்னை ராயல் தியேட்டரில் நடைபெற்ற இவரது தசாவதார நாடகத்திற்குத் திருநெல்வேலியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனவென்ருல், அந்த நாளில் அது பெரிய வியப்புக்குரிய செய்தி அல்லவா? "த்ரீ டைமன்ஷன்' என்று இப்போது சொல்லுகிருேமே, அப்படிப்பட்ட கனபரிமாணக் காட்சிகளுக்கு முதன் முதலாகத் தமிழ் நாடக மேடையில் வித்திட்டு வளர்த் தவர் திரு. சி. கன்ஆனயா அவர்கள்தாம். மின்சார வசதிகள் இன்றைய அளவுக்கு வளர்ச்சிபெருத அந்த காளில் அவர் காட்டிய அற்புதக் காட்சிகளை இன்று எண்ணிப் பார்த்தாலும் திகைப்பூட்டுவதாக இருக் கிறது. திரு. சி. கன்னையா அவர்களைப் பின்பற்றி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பால மீன ரஞ்சனி சங்கீத சபை, பூரீ பால ஷண்முகானந்த சபா முதலிய நாடக சபைகள் காட்சியமைப்பு முறையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின. பொதுவாக அன் றிருந்த எல்லா நாடக சபைகளுக்கும் காட்சிகளைப் பொறுத்தவரையில் திரு. சி. கன்னையா அவர்களே வழி காட்டியாக இருந்தார் எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/53&oldid=1322584" இலிருந்து மீள்விக்கப்பட்டது