பக்கம்:நாடகக் கலை 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 காடகக் கலை காடகத்திற்குத் தடை 1931-ல் நாங்கள் திரு. வெ. சாமிகாத சர்மா அவர்கள் எழுதிய பாணபுரத்துவீரன் என்னும் தேசியப் புரட்சி நாடகத்தைத் தேசபக்தி என்னும் பெயரால் கடத் தினுேம். இந்தத் தேசபக்தியும், கதரின் வெற்றியும் தமிழ் காட்டின் பல நகரங்களில் ஆங்கில சர்க்காரால் அன்று தடை விதிக்கப்பெற்றன. தேசியப் போராட்டம் உச்ச கிஆலயில் இருந்த காலம் அது. அந்நாளில் திருவாளர்கள் எம். ஜி. கடராஜபிள்ளை, எஸ். எஸ். விசுவநாததாஸ் போன்ற பல நடிகர்கள் நாடக மேடைகளில் தேசியப் பாடல்களை முழக்கித் தேச பக்திக்கனலை எழுப்பிய சிறப்பையும் இங்குக் குறிப்பிட வேண்டும். புதுக்கோட்டை திருதம்புடு பாகவதர் அவர்களால துருவன், பக்த ராமதாஸ் என் னும் நாடகங்கள் எழுதப் பெற்றன. மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபையார் இவரது பக்த ராமதாஸ் காட கத்தை மிக வெற்றிகரமாகச் சென்னையில் நடத்திர்ைகள். இந் நாடகத்தில் நவாப் பாத்திரத்தைத் தாங்கிச் சிறப்புற நடித்த திரு. டி. எஸ். இராஜமாணிக்கம் அவர்கள் நவாப் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ருர், நவாப் இராஜமாணிக்கம் இவருடைய மதுரை தேவி பால விநோத சங்கீத சபை 1933-ல் நிறுவப்பட்டது. இந் நாடக சபையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/54&oldid=1322585" இலிருந்து மீள்விக்கப்பட்டது