பக்கம்:நாடகக் கலை 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 5笠 திரு. சி. ஏ. அய்யாமுத்து அவர்கள் எழுதிய இன்டி சாகரன் என்னும் தேசிய நாடகத்தையும், பிரேமகுமாரி என்னும்பெயரில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் துர்க்கேச கந்தினி நாவலையும் நாடகமாக கடித்தனர். கவாப்’ அவர்கள் திரு. சி. கன்னையா அவர்களின் காட்சி யமைப்பு முறைகளைப் பின்பற்றி இராமாயணம், தசாவ: தாரம், குமாரவிஜயம், சபரிமலை ஐயப்பன், சக்தி லீலா, ஏசு. காதர், பக்தராமதாஸ் முதலிய நாடகங்களை மிகச் சிறப் பாக கடத்திப் புகழ் பெற்றர். பி. எஸ். கோவிந்தன் புளியமாககர் திரு. சுப்பா ரெட்டியார் அவர்களும் ஒரு பாலர் சபையை நடத்தி வந்தார். இச் சபையினர் இலங்கை, மலேயா போன்ற வெளிகாடுகளுக்கும் சென்று புகழ் பெற்றனர். நெடுங்காலம் இயங்கி வந்த, இந்தக் குழுவில் தோன்றிய கடிகர்களில் திரு. பி. எஸ். கோவிந்தன் குறிப்பிடத்தக்கவர். பாலர் சபைகள் மற்றும் பல பாலர் சபைகள் இடையிடையே தோன்றி மறைந்திருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத். தக்கவை பட்டினத்தார் நாடகத்தை மேடைக்குக் கொண்டுவந்த திருச்சி பால பாரத சபை. மற்ருென்று. பிரசித்தி பெற்ற என். வி. சண்முகம் பட்டணம் பொடி கிறுவனத்தார் தோற்றுவித்த பாலர் சபை. இன் னென்று எட்டயபுரம் இளையராஜா காசி விசுவகாத பாண்டியன் அவர்கள் கடத்திய சிறுவர் நாடகக் குழு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/55&oldid=1322586" இலிருந்து மீள்விக்கப்பட்டது