பக்கம்:நாடகக் கலை 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காடகக் கலை திரு. ஏ. எஸ். ஏ. சாமி எழுதிய பில்ஹணன் நாடகம் 1944-ல் ஈரோட்டில் எங்கள் நாடக சபையிலே அரங் கேறியது. இது ஒரு சிறந்த இலக்கிய நாடகமாகவும் மக்களின் மதிப்பைப் பெற்றது. இதைத்)தொடர்ந்து டி. கே. முத்துசாமி அவர்கள் காளமேகப் புலவர் கதையை காடகமாகத் தயாரித்தார். நாடகக் கலை மாநாடுகள் இந்தச் சமயத்திலேதான் 1944 பிப்ரவரியில் ஈரோட் டில் தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு பொரு ளாதாரப் பேரறிஞர் திரு. ஆர். கே. சண்முகம் செட்டி யார் அவர்கள் தலைமையில் கடைபெற்றது. இந்தியாவிலேயே நாடகக்கலை வளர்ச்சிக்காக கடந்த முதல் மாநாடு இது. இந்த மாநாட்டை காங்களே முன் னின்றி நடத்தினுேம். நகைச்சுவை நடிகர் திரு. டி. என். சிவதாணு மாகாட்டின் செயலாளர். இதைத் தொடர்ந்து கரந்தையிலும் சென்னையிலும் காடகக்கலை மாநாடுகள் கடைபெற்றன. இம் மாகாடுகளில் காடகக் கலை வளர்ச்சிக்குரிய வழிவகைகளைப்பற்றி அறிஞர்கள் ஆய்வுரை செய்தார்கள். துன்பியல் நாடகங்கள் 1944-ல் திரு. கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதியும் திரு. ப. நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜாவும் எங்கள் காடக சபையில் நடை பெற்றன. இவ்விரு நாடகங்களும் சிறந்த மறுமலர்ச்சி காடகங்கள் எனப் பத்திரிகையாளரால் பாராட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/58&oldid=1322591" இலிருந்து மீள்விக்கப்பட்டது