பக்கம்:நாடகக் கலை 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாடகக் கலை தேடித் தந்தன. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், திேதேவன் மயக்கம், காதல் ஜோதி முதலான நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து, வன்மை வாய்ந்தது. சொல்லழகும் பொருளழகும் துள்ளிவரும் ஒரு புதுமை யான தமிழ் கடையை இவர் கையாண்டார். பல்வேறு நாடக சபைகள் 1944-ல் நவாப் இராஜமாணிக்கம் குழுவிலிருந்து விலகிய திரு. டி. கே. கிருஷ்ணசாமி அவர்கள் சக்தி நாடக சபாவைத் தோற்றுவித்தார். திரு. எஸ். டி. சுந்தரம் அவர்கள் எழுதிய கவியின் கனவு என்னும் தேசிய சரித்திரக் கற்பனை நாடகம் இந்த சபையின் முதல் காடகமாக அரங்கேறியது. காட்சி அமைப்பு முறைகளிலும் சக்தி கிருஷ்ணசாமி சில கல்ல வரவேற்கத்தக்க புதுமைகளைச் செய்தார். இவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியருமாவார். விதி, தோழன், ஜீவன் முதலிய நாடகங்களை இவர் தமது நாடக சபாவுக் கென்றே எழுதித் தயாரித்தார். காரைக்குடி வைரம் அருளுசலம் செட்டியார் ரீராம பாலகான சபா என்னும் ஒரு நாடகக் குழுவைத் தோற்று வித்தார். இந்த நாடக சபை சில காலம் சிறப்பாக கடைபெற்றது. திருமழிசையாழ்வார், பக்த சாருகதாசர், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை முதலிய சில புதிய காடகங்கள் இந்தச் சபையினரால் அரங்கேற்றப் பெற்றன. இந்தச் சபையும் பல புதிய கடிக நடிகை யரைத் தமிழுலகத்திற்குத் தந்தது. சக்தி நாடக சபாவிலிருந்து விலகிய திரு. கே. என். ரத்தினம் அவர்கள் தேவி நாடக சபாவைத் தொடங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/60&oldid=1322593" இலிருந்து மீள்விக்கப்பட்டது