பக்கம்:நாடகக் கலை 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 63 எழுதிய ரத்த பாசம் முதலிய நாடகங்கள் சிறந்த சமுதாய காடகங்களாக விளங்கின. தமிழறிஞர் திரு. கி. ஆ. பெ. விசுவகாதம் தமிழ்ச் செல்வம் என்ற ஒர் அருமையான கல்விப் பிரசார நாட கத்தை எழுதியுதவினர். இந்த நாடகமும் எங்கள் சபை யில் நடிக்கப் பெற்றது. திரு. அரு. ராமநாதன் எழுதிய இராஜ ராஜ சோழன் ஒரு மகத்தான சரித்திர நாடகம். தமிழ் மக்களை இந்த நாடகம் வெகுவாகக் கவர்க் துள்ளது. அகிலன் எழுதிய வாழ்வில் இன்பம் என்னும் காடகத்தை காங்கள் கடித்தோம். இந் நாடகம் திருமண விழாவில் கடிக்கக்கூடிய ஒரு கருத்தமைந்த நாடகம். அமெச்சூர் நாடக உலகிலும் எத்தனையோ புதிய காடகங்கள் கடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை குமரகான சபையைச் சேர்ந்த என். விஸ்வநாதய்யர், ராஜசேகரன், ஏாளு பிரதாய சிம்மன் முதலிய பல நாடகங்கள் எழுதி கடித்திருக்கிருர். திரு. தேவன் அவர்களின் கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய பல நகைச் சுவை காடகங்கள் நடிக்கப் பெற்றுள்ளன. சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையம் திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் என்னும் ஒர் அமைப்பை நிறுவிச் சிறந்த முறையில் நாடகங் கள் நடித்து வருகிருர். என். வி. ராஜாமணி எழுதிய கண்கள். இருளும் ஒளியும், தி. ஜானகிராமன் எழுதிய காலு வேலி கிலம், பி. எஸ். இராமையா எழுதிய மல்லியம் மங்களம், குஹன் எழுதிய புகழ் வழி, கல்கி கிருஷ்ண மூர்த்தியின் மோகினித்தீவு, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்னும் கவிதை நாடகம் ஆகிய இவற்றை சேவா ஸ்டேஜ் அமைப்பாளர்கள் மிக நல்ல முறையில் புதிய விதமான காட்சி அமைப்புகளோடுகடத்தி வருகிறர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/65&oldid=1322598" இலிருந்து மீள்விக்கப்பட்டது