பக்கம்:நாடகக் கலை 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புக் கலை. 93. யானைதான் நமக்குத் தெரியும் அன்பர் ஒருவர்' வரு கிருர்; கொஞ்சம் ஆராயும் தன்மை கொண்டவர். "இந்த யானை மிகவும் கன்ருயிருக்கிறதே...இது எந்த மரத்தால் செய்யப்பட்டது? என்று கேட்கிருர். இப் போது அவரது கேள்விபால் யானை மீண்டும் மரமாகி விட்டது. யானையில் மறைந்திருந்த மரம் வெளிவந்து விட்டது. மரம் யானையாகவும், பூஜனயாகவும், மேசையாக வும், கட்டிலாகவும், காற்காலியாகவும் பல்வேறு உரு வங்களில் காட்சியளித்தாலும் அவற்றிலெல்லாம் மரம் என்ற மூலப் பொருள் மறைந்து கிடப்பதை காம் அறி வோம். அதைப்போலவே கண்ணனுகவும் கறுப்பணு கவும், அரசனுகவும், ஆண்டியாகவும் எத்தனை எத்தனை வேறுபட்ட பாத்திரங்களில் நடிகன் தோன்றிலுைம் எந்தச் சமயத்திலும் அவன் அப்பாத்திரத்தினுள்ளே கிற்கிருன் என்பது உன்மை. உலகில பறறில்லாமல் உலகிலே வாழும் யோகி களே, முனிவர்களைக் குறிப்பிடும்போது தாமரையிலே நீர்போல் பற்றற்று வாழ்கிருர் என்று சொல்லுகிறர் களல்லவா? அதைப்போல் பாத்திரத்துடன் ஒன்றுபட்டு கிற்கும் நடிகனையும், தாமரையிலை நீர்த்துளிபோல் பாத் திரத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் கிற்பவன்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆம் ஆதாரமாக இருக்கும் தாமரையிலையிலிருந்து கீழே உருண்டு விழுக் தால் நீர்த்துளி உருக்குலைந்து போகுமல்லவா? கடிகனே ஆதாரமாகக் கொண்டு நடமாடும் பாத்திரமும் அப் படித்தான். கடிகனைவிட்டு விலகினுல், அதாவது கினை விழந்து கின்ருல், பாத்திரம் உடைந்து சிதறுண்டு போகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/94&oldid=1322632" இலிருந்து மீள்விக்கப்பட்டது