பக்கம்:நாடகக் கலை 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

அறிவு வளர்ச்சிக்கான விளையாடல்களும் உண்டு. நாடகம் அறிவு வளர்ச்சிக்கான விளையாடல்களில் ஒன்று.

கட்டுரை - கதை. நாடகம்

"இளமையிற் கல்' என்று நமது அவ்வைப் பிராட்டி சொல்லியிருக்கிருர். இதை நாம் புத்தகத்தில் படிக் கிருேம். இதையே கருப்பொருளாக வைத்து இளமை யில் ஒழுங்காகப் படித்ததனுல் நன்ருக வாழ்ந்த ஒருவனையும், படிக்காததனால் பெரியவனையின் கஷ்டப்பட்ட ஒருவனையும் சேர்த்துக் கதையாகச் சொல்லுகிருர்கள். இளமையிற் கல்’ என்று நீதி சொன்னதைவிட அந்த நீதியைக் கதையாகச் சொல்லும்போது நமக்கு இன்னும் நன்ருகப் புரிகிற தல்லவா?

பண்டைக்காலத்திலெல்லாம் நமது பாட்டிமார்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நீதிக்கதைகள் சொல்லுவ துண்டு. 'திருடாதே என்பதற்காகத் திருடியதால் ஒருவன் அடைந்த கஷ்டங்களை விளக்கி ஒரு கதை, நல்லவனுடைய நட்பை எடுத்துக் காட்ட ஒரு கதை, தீய நட்பை விளக்க ஒரு கதை, இப்படிக் கதைகளின் மூலம் நமக்கு அறிவுரைகள் கூறி நம்முடைய பாட்டிமார்கள் நம்முடைய அறிவை வளர்த்திருக் கிருர்கள். அந்தக் கதைகளையே காட்சிகளாக வகுத்து வேடம் புனைந்து நாடகமாக நடித்தால் இன்னும் தெளிவாகச் சிறுவர்கள் மனத்தில் பதியும்.

அவ்வைப்பிராட்டி நமக்குச் சொன்ன அறிவுரை களையெல்லாம் காட்சிகளில் சேர்த்துத்தான் அவ்வை நாடகத்தை நாங்கள் நடித்து வருகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/117&oldid=1322488" இலிருந்து மீள்விக்கப்பட்டது