பக்கம்:நாடகக் கலை 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

களையே வேஷம் போடச் செய்து ஆடிப்பாடி நடிக்க வைத்துப் பார்ப்பது மிகச் சிறந்த விளையாட்டல்லவா? இது யாரோ ஒரு பெரியவர் மூளையில் முதலில் தோன்றியிருக்கிறது. அதன் பயனாகத்தான் இந்த நாடக விளையாட்டு உண்டாகி இருக்கிறது. இன்னும் நாடகத்தை 'விளையாட்டு' என்று தமிழிலே சொல்லுவதுண்டு. ஆங்கிலத்தில் கூட 'டிராமா என்பதோடு 'பிளே' (Play) என்றும் சொல்வதுண்டல்லவா?

இப்படி நம்முடைய முன்னோர்கள் மூளையிலே ஒரு காலத்தில் தோன்றிய இந்த நாடக விளையாட்டு, பாவைக்கூத்து முதல் பலவிதக் கூத்துகளாக முன்னேறி வளர்ந்து நாட்டியமாகி, நாட்டிய நாடகமாகி இன்று நாம் காணும் நவீன நாடக உலகற்கு வந்த கதை மிகப் பெரிய வரலாறு.

நாடகமும் நாட்டியமும்

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடக மேடையிலே வெறும் ஆட்டமும், பாட்டும்தான் இருந்து வந்தன; பெரும்பாலும் பேச்சு இல்லை. முன் பெல்லாம் நாட்டியத்தையும், நாடகத்தையும் வேறாகக் கருதவில்லை எனத் தெரிகிறது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாட்டியமாடும் மாதவியை 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' என்றுதான் குறிப்பிடுகிறார். தனிப் பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதை 'நாட்டியம்' என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம் புனைந்து ஆடுவதை 'நாடகம்' என்றும் சொல்லி யிருக்கிறார்கள். இரண்டிற்குமுரிய பொதுப் பெயர் ‘கூத்து' என்றே வழங்கப் பெற்று வந்திருக்கிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/23&oldid=1540107" இலிருந்து மீள்விக்கப்பட்டது