பக்கம்:நாடகக் கலை 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வட இந்தியாவில் பெரும்பாலும் நாடகம் நடத்து வோர் நாடக வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் 'நாட்டிய சங்கம்' என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரையில் பல விதமான கூத்துவகைகளைப் பற்றிச் சொல்லுகிறார். அவற்றை யெல்லாம் நான் இங்கே விரித்துரைக்கப் போவதில்லை.

ஆட்டமும் பாட்டும்

ஆடலும் பாடலும்தான் நாடகமாக இருந்தது என்பதற்கு மட்டும் ஒரே சான்று கூறுகிறேன். நாடகக்கலை இல்வளவு தூரம் வளர்ச்சி பெற்ற பிறகும் கூடப் பழைய 'ஆட்டம்' என்ற பதம் வழக்கிலிருந்து வருகிறது பார்த்தீர்களா?

நாடகக் கொட்டகைக்குச் சிறிது நேரம் கழித்து வருகிறார் ஒருவர்; அனுமதிச் சீட்டு விற்பவரிடம் 'ஏன் ஐயா, ஆட்டம் ஆரம்பிச்சாச்சா? எத்தனை காட்சிகள் போயிருக்கும்?' என்று ஆவலோடு கேட்கிறார். அவர் நாடகத்தைப்பற்றித்தான் கேட்கிறார். ஆனால், நீண்ட கால வழக்கத்தின் காரணமாக நாடகம் ஆட்டமாக வெளி வருகிறது.

நான் சில நாட்களுக்கு. முன் கடற்கரையிலே உட்கார்ந்திருந்தேன். ஒரு நண்பர் வந்தார். நல்ல நாடக ரசிகர். 'என்ன ஷண்முகம், ஒன்றரை ஆண்டுகளாக நாடகத்தை நிறுத்திவிட்டீர்களே, மறுபடியும் எப்போ ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டார். மற்றொரு சமயம் நான் வெளியூர் போயிருந்தேன். அங்கே என்னைச் சந்தித்த பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/24&oldid=1540108" இலிருந்து மீள்விக்கப்பட்டது