பக்கம்:நாடகக் கலை 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இந்தத் தனிச் சிறப்பால் நாடகத்தை வாழ்வோடு ஒட்டிய கலையாகத் தமிழர்கள் போற்றி வளர்த்து வந்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.

நாடக இலக்கணம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறப்படும் தமிழ் நூல்களில் 'முறுவல், சயக்தம், செயிற்றியம், குணநூல்,' முதலிய பல நாடக இலக்கண நூல்களைப்பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.

சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படும் 'சிலப்பதிகாரம்' என்ற தமிழ்க் காப்பியத்தில் நாடகக் கலையைப் பற்றியும், காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்க அமைப்பைப் பற்றியும் விரிவாகக் கூறப் பெற்றிருக் கிறது. இந்தச் சிலப்பதிகார நூலுக்கு சிறந்த உரை யெழுதிய அடியார்க்கு நல்லார் தமது குறிப்பில் நாடகத் தமிழைப் பற்றிக் கூறும் 'பரதம்' 'அகத்தியம்' என்னும் நூல்கள் இருந்தனவென்றும் அவை அழிந்து விட்டன என்றும் குறிப்பிடுகிறார்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெற்கே குமரி முனையை படுத்து இலெமூரியாக் கண்டம் என ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கே பாண்டியர் அரசாட்சியில் சங்கம் அமைத்து மொழியாராய்ச்சி நடைபெற்றதாகவும் பெருங் கடல்கோளினால் அந்த நாடு நகரங்கள் அழிவுற்றபோது -நாடக, இசை, இலக்கண நூல்கள் பல அழிந்து போயினவென்றும் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் பரதசேனுபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலிய நாடக நூல்கள் இருந்தனவாகக் குறித்திருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/27&oldid=1540111" இலிருந்து மீள்விக்கப்பட்டது