பக்கம்:நாடகக் கலை 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

பெரியோர்களே வரையறுத்துக் கூறியிருக்கிருர்கள். காலத்திற்கேற்ப இவை மாறத்தான் செய்யும்; மாறத் தான் வேண்டும்.

இனி, இன்றைய நாடகத்திற்குத் தேவையான நடிப்புக்கலையைப்பற்றி நாம் ஆராய்வோம்.

நடிப்புக்குரிய தகுதிகள்

ஒரு பாத்திரத்தை ஏற்கும் நடிகனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன?

நல்ல உடல் நலம் குரல் வளம் பேச்சுத் தெளிவு நினைவாற்றல் தோற்றப் பொலிவு

இவற்ருேடு இசைஞானமும் நடனப் பயிற்சியும் ஒரளவு இருந்தால் நல்லது. இவையெல்லாம் நடிப் புக் கலையிலே ஈடுபடுவோனுக்கு இருக்கவேண்டிய அம்சங்கள். அக்கலையிலே ஓரளவு வெற்றி பெற இவை துணை செய்யும். பொதுவாக எல்லாவிதமான அங்க அசைவுகளிலும் நடிப்பு உணர்ச்சி வெளியாகும். உடல், கை கால் அசைவுகளை விட முகத்தின் பாவம் முக்கியம். அந்த முகத்திலே முக்கியமானவை கண்கள்.

அச்சுவைகளில் எண்ணம் வந்தால் தோற்றும் உடம்பில்; உடம்பின் மிகத்தோற்றும் முகத்து: முகத்தில் மிகத்தோற்றும் கண்ணில்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/75&oldid=1322437" இலிருந்து மீள்விக்கப்பட்டது