பக்கம்:நாடகக் கலை 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அடக்கியும் உயர்த்தியும் பேசவேண்டும். மின்சார விளக்குகள் எங்கெங்கே பொருத்தப்பட்டிருக்கின்றன; எங்கே நின்ருல் முழு வெளிச்சமும் தன் மேல் விழும்; மற்ற நடிகர்களை மறைக்காமல் எப்படி நிற்பது; என்பனவற்றையெல்லாம் நடிகன் நினைவில் வைக்க வேண்டும்.

நடிப்பின் நுணுக்கம்

பக்கத்திலே நிற்கும் நடிகன் பாடத்தை மறந்து விட்டுத் தவிக்க நேரலாம். நினைவாற்றலுள்ள பண் பட்ட நடிகன் அதையும் சபையோர் அறியாதபடி சமாளிக்க வேண்டும்.

ஒரு சமுதாய நாடகத்தில் நடிகன் சொல்லும் ஒரு வார்ததை, ஒரு அசைவு, கதைப் போக்கிற்கு இன்றி யமையாததாக இருக்கலாம். அந்த நேரத்தில் சபை யில் ஒரு குழந்தையின் அழுகையாலோ அல்லது ஒரு பெரிய மனதர் எழுந்து போனதாலோ, வேறு கார ணங்களாலோ சலசலப்பு ஏற்படலாம். இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நடிகன் தனது திறமை யால் எப்படியாவது சமாளித்துக் குழப்பம் அடங்கிய பின்பே அந்த வார்த்தைகளைச் சொல்ல முயல வேண்டும். இல்லாவிடடால கதைப் போக்கைச் சபை யோர் புரிந்துகொள்ள முடியாமற் போகும்.

பண்பட்ட நடிப்பின் தன்மை

ஒரு சிறிய யானைப் பொம்மை; மரத்தால் செய்

யப்படடது. ஆணுல், இபபோது மரம மறைந்து விட்டது; யானை தான் நமக்குத் தெரியும். அன்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/92&oldid=1322456" இலிருந்து மீள்விக்கப்பட்டது