பக்கம்:நாடகக் கலை 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

கொள்ள வேண்டும். ஆனால், அவதானிகளைப் போல் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயங்களை மூளையில் போட்டுக் கொண்டு குழப்ப வேண்டிய நெருக்கடி நடிகனுக்கு இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய புதிய விஷயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலையும் நடிகனுக்கு இல்லை. மேடையில் நடிப்பின் வெற்றிக்குத் தேவையான ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட முக்கியமான சில அம்சங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.

ஒருமுகப்பட்ட சிந்தனை

மேடையைத் தவிர வேறு சிந்தனைகள் எதுவும் நடிகனின் உள்ளத்தில் இடம் பெறக் கூடாது. எப்போதும் சபையைப் பொது நோக்காகவே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட எவரையும் பார்ப்பது கவளத்தை வேறு வழியில் திருப்பக் கூடும். நடிப்பிலே கோளாறு ஏற்பட்டுவிடும். நாடகம், பாத்திரம், நடிப்பு, மேடை, சபை, இந்தச் சூழலை விட்டு வேறிடத்துக்குப் போகாமல் நடிகன் தன் சிந்தனையைக்கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னை மறந்து பாத்திரமாகவே மாறி உணர்ச்சி வசப்படுவது நடிப்பின் வெற்றியல்ல என்பதை விளக் கினேள். ஆனால், அவ்வாறு சிறிது உணர்ச்சி வசப்படும் நடிகர்கள் நாளடைவில் திருந்திப் பண்பட்டு விட முடியும். பாத்திரத்தையே மறந்து தானாகவே நிற்கும் நடிகர்களும் உண்டு. இவர்களால் பாத்திரம் கொலை செய்யப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். மறந்தும் மறவாத வழியே வெற்றிக்குரிய வழி. இது மேடையேறுபவர்கள் எல்லாருக்கும் எளிதில் வந்து விடாது. நன்கு பயிற்சி பெற்றுப் பல ஆண்டுகள் நடித்து அனுபவ முத்திரை பெற்ற நடிகர்களிடமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/97&oldid=1550645" இலிருந்து மீள்விக்கப்பட்டது