பக்கம்:நாடகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நெற்றியிட்டாள்? நினைவகன்ருள்? நடந்தாள். ஒரு குதிரை ஒடி வந்து குறிக்கிட்டது. நுளம்பன் குதித்தான். நுள : கன்னர தேவி! இது என்ன கோலம்? நங் : காலத்தின் தீர்ப்பு... நுள உன் கண்ணிரைத் துடைக்கத் தான் வந் தேன்... நங் : நுளம்பரே எனக்கு அழத் தெரியாது..... H நூள கொதித்திருக்கும் உன் முகத்தில் நெருப்புக் கொழுந்தின் நீலம் தெரிகிறது... நங் : வெடித்திருக்கும் எரிமலை வெளியாவதற்குள் விலகிப்போ!... நுள : நுளம்பபாடிக்குத் தேவதையாக அழைக் கின்றேன்... நங் : நான் பேயாகி விட்டேன்... துள : நானே உனக்கு நல்ல பூசாரியாவேன். நங் : நொந்த உள்ளத்தில் யாரும் நுழைவதற் கில்லை... நுள : உன் நோக்காட்டைத் தீர்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தவன் நான். என்னேடு மன்றுக்கு வா...உன் பகையை வென்று தருகிறேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/17&oldid=781604" இலிருந்து மீள்விக்கப்பட்டது