பக்கம்:நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங் : I I இன்று நான் ஒரு அடிமைப் பெண்! என்னை உரிமை கேட்பவன், முதலில் என் மண்ணுக்கு உரிமை கொண்டு வர வேண்டும். சோழனை வென்று என்னைச் சுதந்திரமாக்கு! பிறகு மணம் பேசு! நுள : கன்னரதேவி, உன்னை எனக்கில்லை என்ற நங் : நங் : மன்னவன் இந்த மண்ணுக்கே இல்லையாகப் போளுர். நீ ஒரு பெண்! பொங்கி வரும் கங்கையும் காவிரியும் பெண் என்பார், வானத்தை வாணி என்பார்: பூமியைத் தேவி என்பார்: கலையும் மகளாவாள்; தமிழும் தாயாவாள், மலரும் கனியும் மங்கலப் பொருளும் மங்கையர் வண்ண மடா: உன்னைப் பெற்ற அன்னையும் ஒரு பெண்தான் போ போ. என இகழ்ந்தாள் நடந்தாள்: வழி மறித் தான்; வலிந்து எடுத்தான்; இடையிருந்த குத்து வாளை எடுத்தாள்: அவன் நெஞ்சின் ஆழத்தை அளந்தாள்; சபித்தாள்; சாய்ந்தான். வஞ்சனைக்கு நரியே! நஞ்சிருந்த உன் கறியை காக்கை கோதாது! கழுகு தின்னது! என வெறித்தாள்; சிரித்தாள்; பழியெடுத்த பழையனுர் நீலியானள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/18&oldid=781606" இலிருந்து மீள்விக்கப்பட்டது