பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


கின்றன. பட அதிபர்கள் வியப்படைகிறார்கள். பொது

மக்கள் ஏமாற்றி விடுகிறார்கள். குழப்ப நிலை

பொதுவாகக் கலைத்துறையினைப் பொறுத்த வரை யில் பொதுமக்கள் சுவை என்பது புரிந்து கொள்ள முடி யாத நிலையில் ஒரே குழப்பமாகத்தான் இருந்து வரு கிறது. ஒருவருக்குப் பிடிப்பது மற்றவருக்குப் பிடிப்ப தில்லை. ஒருவருக்குக் கலைச்சிகரமாகத் தோன்றுகிறது. அதுவே மற்றவருக்குக் கலைக்கொலையாகத் தோன்று கிறது. ஒருவர் புராணக் கதைகளை விரும்புகிறர் மற்றவர் வரலாற்று ஓவியங்களை வரவேற்கிறார், இன்ைெருவர் சமுதாய மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக் கிறார், வேறொருவர் எந்தக் கதையாயிருந்தாலும் அதில் பொழுது போக்கை காடுகிறார். இந்த கிலையில் பொது மக்களின் சுவையுணர்வினைப் புரிந்து கலை நிகழ்ச்சியைத் தயாரிப்பதென்பது எளிதான காரியமா?

பத்திரிகைகளின் கருத்து

ஒரு நாடகத்தை அல்லது திரைப் படத்தைப் பெரிய வெற்றியென்கிறது ஒரு பத்திரிகை. அதையே மகத்தான தோல்வியென்கிறது மற்றாெரு இதழ். ஒன்று கலைச் சிகரம் என்கிறது. மற்றாென்று வெறுங் குப்பை யென்று கூசாமல் கூறுகிறது. நான்கு பத்திரி கைகள் சேர்ந்தாற்போல் நல்ல படம் என்று பாராட்டி விட்டால்கூட காம் மகிழ்ச்சியடைவதற்கில்லை. பண வருவாயின் மூலம் பொதுமக்கள் அவற்றின் கருத்துரை களையெல்லாம் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

பத்திரிகையால் பாராட்டப்பெறும் கிகழ்ச்சிகள் படு தோல்வியடைவதையும், படுமோசமென்று. கருதப்