பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


பெறும நிகழ்ச்சிகள் பெருவெற்றி பெறுவதையும் காம் கண்கூடாகக் கண்டுவருகிருேம். எனவே, விமர்சகர் களின் கருத்தும் பொதுமக்கள் கருத்தென்று செல்வதற் கில்8ல.

என்னுடைய நீண்டகால அனுபவத்தில் ஒன்று உறுதியாகத் தெரிகிறது. பொதுமக்கள் சுவையென் பது பலவிதமாக இருக்கிறது. ஊருக்கு ஊர்கூட அச்சுவை வேறுபடுகிறது.

எங்கள் முயற்சி

முன்பெல்லாம் நாடகம் முடிந்ததும் விரைவாக வேடத்தைக் கலைத்துவிட்டு, முக்காடு போட்டுக் கொண்டு நாடகம் முடிந்து வெளியேறும் மக்களோடு கலந்து கொள்வோம். அவர்கள் கருத்துக்களை அறிய முயற்சிப்போம். போகிற போக்கில் மனம்விட்டுப் பேசும் மக்களின் உரையாடல் மிகச் சுவையாக இருக்கும். இவர்களின் சுவையுணர்வுக்குத் தக்கவாறு ஏதாவது மாறுதல் செய்வோம். மறுநாள் வரும் ரசிகர் களின் சுவை கேர் எதிரிடையாக இருக்கும்.

ஒரு நாடகத்தில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தை மக்கள் களிப்போடு கைதட்டிப் பாராட்டியிருப்பார்கள் மறுநாள் அதே கட்டத்தில் அவையில் மரண அமைதி கிலவும். எங்களுக்கு இவையெல்லாம் மிகச் சாதாரண மான சம்பவங்கள்.

நாங்களே கை தட்டுவோம்

மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்குரிய வழி வகைகளை காங்களே உருவாக்குவதுண்டு. அவையில்