பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


முடிவைக் கொண்ட நாடகம் இது. இக்காடகத்தை இன்ப முடிவுடையதாக மாற்றவேண்டுமென்று பல கடிதங்கள் வந்தன. மக்களின் கருத்தினை மதித்து அவ்வாறே அடுத்த வாரம் காடக நாயகனையும் காயகி யையும் சாகவிடாமல் திருமணம் முடித்து வைத்தோம். இன்ப முடிவினை விரும்பிக் கடிதம் எழுதிய அனபர்களி லேயே பலர் முந்திய முடிவே சிறந்ததென்று மீண்டும் அறிவித்தார்கள். இறுதியாக எங்கள் முடிவே சரியான தென்று காங்கள் மன நிறைவு பெற்றாேம்.

என் அனுபவ முடிவு

பல ஆண்டுகளாகப் பலவேறு ஊர்களில், பல மேடைகளில் கடித்தும், பொது மக்களோடு பழகியும் பெற்ற அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது: பொது மக்களின் சுவையினை அறிந்து கலை வளர்ப்ப தென்பது இயலாதது மட்டுமல்ல; விரும்பக்கூடியது மல்ல. இந்த முடிவுக்குத்தான் கான் வந்திருக்கிறேன். என்னுடைய இந்தக் கருத்து பொதுமக்களை அவமதிப் பதுபோலத் தோன்றலாம். ஆல்ை, உண்மையான ஒரு கலைஞன் இந்த முடிவுக்குத்தான் வரமுடியும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்குப் பயன் தருமா?

கடிப்பதற்கென்று ஒரு நாடகத்தைத் தேர்ந்தெடுக் கும்போது, அந்த காடகம் பொது மக்களுககுப் பிடிக் குமா? வதுலாகுமா? வரவேறபிருக்குமா? என்றெல்லாம் காங்கள் ஆ ர ா ய் ச சி செய்துகொண்டிருப்பதில்லை. கடிக்கும் அந்த நாடகத்தால் பொதுமக்களுக்குப் பயன் ஏற்படுமா என்பதைத்தான் சிந்தித்து முடிவு செய்வோம்.

път.-7