பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


பாராட்டுகின்ற காட்சிகள் கிறைந்திருக்க வேண்டும். இவ்வாறு சிரித்து மகிழ வைப்பதோடு குழந்தைகளின் சிந்தனையையும் துரண்டுவதாக நலல படிப்பினைகள் இருக்கவேண்டும். காடகத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக் குத் திரும்பும்போது சில நல்ல எண்ணங்கள் குழந்தை களின் மனத்திலே பதிந்திருக்க வேண்டும்.

விட்டில் தாய் தந்தை முதலியோர்களிடம் எப்படி கடந்துகொள்ள வேண்டும் பள்ளிக்கூடத்தில ஆசிரியர் களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? உட8லயும், உடைகளையும் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? பள்ளிக்குச் செல்லும்போது வீதிகளிலே வம்பு பேசாமல் எவ்வாறு ஓரங்களிலே கடந்து செல்ல வேண்டும்? என்பன போன்றவற்றையெல்லாம் சுவை யான நாடகங்களின் மூலம்-திரைப்படங்களின் மூலம் குழந்தைகளுக்குப் போதிக்கலாம்.

“புலி, புலி’ என்று வேடிக்கையாகப் பொய் சொல் லிய, ஆடு மேய்த்த சிறுவன் கதையைப்போல், நன்மை தராத பொய்யைச் சொல்லுவதால் எவ்வளவு தீமைகள் ஏற்படும்? தீமையைத் தரும் மெய்யைச் சொல்லுவதால் எவ்வளவு கெடுதிகள் ஏற்படும் கல்லவனுக இருப்பவன் எவ்வாறு மேன்மை அடைகிருன்? கெட்டவகை இருப் பவன் எவ்வாறு சீரழிந்து போகிருன் , என்பவைகளைப் போன்ற கருத்துக்கள் குழந்தைகளின் பருவத்திற் கேற்ற நாடகத்திற்குரிய கலல விஷயங்கள்.

பலருக்குத் தெரிந்த ஒரு சிறுகதையை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். ஒரு ஊரில ஒரு வாலிபன் இருந்தான். அவனுக்கு வயது இருபது. அந்த வாலிபனுடைய தாயும் தந்தையும் கிழப்பருவத்தினர். கண் தெரியாமல் கடக்கமுடியாத நிலையில்