பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 |

இருந்தார்கள். வாலிபன் மிகவும் நலலவன். பெற்றவர் க்ளைத் தெய்வமாக எண்ணிப் பேணி வந்தான். தாய் தந்தை இருவரையும் இரண்டு கூடைகளில் உட்கார வைத்துத் துணியால் கட்டிக் காவடிபோல் தான் போகும் இடங்களுக்கெல்லாம் தோளிலே சுமந்து கொண்டு போய்ப் பராமரித்து வந்தான். பெற்று வளர்த்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய்வதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்தான்.

ஒருநாள் ஒரு பெரிய காட்டின் வழியே அவன் அவர்களைத் துக்கிக்கொண்டு போகும்போது அப்பா வக்குத் தாகம் ஏற்பட்டது. “மகனே கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா...’ என்றார் தந்தை. உடனே மகன் அவர்களைக் கீழே இறக்கி வைத்துவிட்டு அப்பா , இதோ சமீபத்தில் தண்ணிர் இருக்கிறது. கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுத் துாரத்திலிருக்த சுனையில் தண்ணிரை மொண்டான். எங்கிருந்தோ ஒரு அம்பு விரைந்து வந்து அந்த இளைஞனின் மார்பில் பாய்ந்தது. அவன் அப்பா எனறலறிய வண்ணம் கீழே சாய்ந்தான். அகதச் சத்தததைக் கேட்டதும் அங்கே ஓர் அரசன் வில்லும் கையுமாக ஓடிவந்தான். அந்த அரசன் பெயர் தசரதன். அவன் வேட்டையாட வந்தவன். வாலிபன் தண்ணிர் மொண்ட சப்தம் கேட்டவுடன் ஏதோ ஒரு மிருகம் தண்ணிர் குடிக்கிற தென்று நினைத்துப் புதர் மறைவிலிருந்து பாணத்தை எய்துவிட்டான். இளைஞன் ஒருவன் அம்புபட்டு மெய் கோக அலறித் துடிப்பதைக் கண்ட அரசன், தான் அறியாமல் செய்த குற்றத்தை மன்னிக்கும்படியாக மன்றாடின்ை. மரணவாயிலில் இருந்த அந்த வாலிபன், ‘ஐயா, நீங்கள் தெரியாமல் செய்ததை கான் மன்னித்துவிட்டேன். என் உயிர் பிரியப் போகிறது.