பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தக்கதல்ல. எளிமையான ஒரு கடையைக் கையாளு வதே கல்லது. வசனங்கள் மக்களுக்குப் புரிய வேண்டும். அதல்ை மொழியும் வளம் பெற வேண்டும்.

பேச்சுத் தமிழிலும் இலக்கிய நயம்

கிராமியப் பாடல்களில் இலக்கியச் செறிவு இருப்ப தைப் போலக் கொச்சைத் தமிழ் கடையிலும் இலக்கிய கயத்தைக் கொண்டு வரலாம். அஃது எழுதுபவரின் திறமையைப் பொறுத்தது. குறிப்பிட்ட சில மாவட் டக்காரர்களின் பேச்சைப் போல எழுதுவதானுல் சில் லறைப் பாத்திரங்களுக்கு மட்டுமே எழுதலாம். கதா காயகனும், கதாநாயகியும் சென்னைத் தமிழிலும், காஞ் சில் தமிழிலும், கொங்குத் தமிழிலும் பேசுவது நாடக உணர்ச்சிகளைக் கெடுத்து ககைப்பை உண்டாக்கி விடும். எமுதுவோர் இதை நன்கு சிந்திக்க வேண்டும்.

கனகாம்பரமும் காகிதப்பூவும்

ஆளுவுக்கு ஆளுவும் காணுவுக்கு கானுவும் போட்டு கஞ்சி, இஞ்சி, பஞ்சி, தஞ்சி, கெஞ்சியென்னும் முறையில் மோனை எதுகை வெளியழகு காட்டும் தமிழ்கடை கன காம்பரம், காகிதப்பூ ரகத்தைச் சேர்ந்தது. மனமிராது. கருத்தழகாகிய உள்ளழகும் இருந்தால்தான் மணமுள்ள மலராக இருக்கும். பூ என்றால் மணம் வேண்டுமல்லவா? அதைப் போல் தமிழ்கடை யென்றால் கருத்து இருக்க வேண்டும். வெறும் கவர்ச்சி பயன் தராது. சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை வெளியிடும் போது ஆசிரியர், தமக்கு மாறுபட்ட கருத்துடையோரைத் தாக்கிப் புண்படுத்தும் விதத்தில் எழுதக்கூடாது அதில் பயனுமிராது. மாறுபட்ட மனத்தோரையும்