பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


களும் பணம் கொடுத்து வந்தவர்களல்லவா? அவர் களையும் திருப்தி படுத்த வேண்டுமே அந்தச் சமயங் களில் காங்கள் உள்ளே இருந்து நடிகர்களை முன்னல் போ, முன்னல் போ’ என்று முன்னுக்குத் தள்ள முயலுவோம்.

றைவனுக்கு எங்கிருந்தாலும் கேட்குமே !

زت)

ஒரு வேடிக்கையான கிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்கிறேன். ஒலி பெருக்கியை காங்கள் மேடையில் பயன்படுத்தாத காலம். சிவலீலா நாடகம் நடித்துக் கொண்டிருந்த நாளில் கடந்த நிகழ்ச்சி. சிவ லீலாவில் பாணபத்திரர் ஒரு பக்தர். சிறந்த பாடகர். அவருக்குப் போட்டியாக ஹேமநாதர் என்னும் மற் றொரு மகாவித்துவான் வருகிறார் ஹேமகாதரோடு போட்டியிட வேண்டிய கெருக்கடி பாணபத்திரருக்கு ஏறபட்டு விடுகிறது: போட்டியில் ஹேம காதரைத் தாம் வெல்ல முடியாது என்பதும் பாணருக்குப் புரிகிறது. பாணர் பகவானைச் சரணடைகிறார். சோம சுந்தரப் பெருமான் சக்கிதிக்குச் சென்று தன் அவல கிலையைக் கூறி முறையிடுகிறார் நல்ல அருமையான ஒரு விருத்தப் பாடல். சக்கிதியில் சிவலிங்கத்தின் முன் கிணறு பாடுவது வழக்கம் நாடகம் கடந்தது. நாடகம் முடிந்த மறுநாள் ஒரு விமர்சகர் நாடகத்தைப் பற்றி எழுதி இருத்தார். அந்தக் குறிப்பு நகைச்சுவையோடு எழுதப் பெற்றிருந்தது. குறிப்பைக் கேளுங்கள்.

பாணர் சபையைப் பார்த்தே பாடியிருக்கலாம். இறைவனைப் பார்த்துத்தான் பாடவேண்டும் என்று அவசியமில்லை. இறைவனுக்கு எங்கிருந்தாலும் அவர் குர்ல் கேட்கும். ஆனல் பாணரின் பாடல் சபையோருக்கு