பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


கேட்க வேண்டுமே அதைப் பாணராக நடித்த கடிகர் மறந்து விட்டார் போலிருக்கிறது’ என்று குறிப் பிட்டிருந்தார். பாவம் பாணராக நடித்தவர் சபையையே பார்த்துக் கொண்டு பாடாமல் கொஞ்சம் இயற்கையாக கடிக்க முயன்றதால் வந்த வினை இது.

நடிப்புக்கே முதலிடம்

பாடல்களுக்கும் காட்சிகளுக்கும் அந்த நாளில் இருந்த முதன்மையான இடம் இன்று இல்லை. கதை, உரையாடல், நடிப்பு இவற்றிலேதான் ரசிகர்கள் இன்று அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். காட்சிகளும் பாடல்களும் இரண்டாவதாகத்தான் இடம்பெறு கின்றன. சமுதாய நாடகங்கள் தோன்றிய காலம் முதல் நடிப்புக்கே முதன்மையான இடம் இருந்து வரு கிறது. கடிப்பிலே படிப்படியாக முன்னேற்றமும் சீர்திருத்தமும் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன.

குரலிலும் நடிப்புணர்வு

கடிப்புச் சீர்திருத்தம் என்னும்போது மற்றாென் றையும் இங்கே குறிப்பிட வேண்டும். நடிகர்கள் தம் குரலிலேயே உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். இதற்குத் தனியான பயிற்சி தேவை. வீரம், சோகம், காதல் முதலிய மெய்ப்பாட்டு உணர்ச்சிகளை யெல்லாம் குரலிலேயும் வெளிப்படுத்த லாம். ஐயாயிரம், பத்தாயிரம் பேர் கொண்ட திறந்த வெளி அரங்குகளில் சபையில் பெரும்பாலோர் இந்த கடிப்புணர்ச்சி மிகுந்த குரலைக் கேட்டுத்தான் திருப்தி அடைகிறார்கள். வானொலி காடகங்களில் கு ர லி ன் ஆழலம்தான் நடிகர்களுடைய திறமை வெளிப்பட