பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன் அறை பட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்’ நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம், எல்லாவற்றையும் சேர்த்து, சுண்டுர் இளவர சனைப் பலங்கொண்ட மட்டும் தாக்கிவிட்டார், அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீ ண் டு ம் எழுந்து உறுமிவிட்டுப் போகவேண்டிய சுண்டுர் இளவரசன் அன்று எழுந்திருக்க முடியாமல் அவஸ் தைப்பட்டு, எப்படியோ ஒருவகையாகத் தட்டுத்தடுமாறி உள்ளேபோய்ச் சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய்ப் பரிதவித்த, அந்த பரிதாபத்துக்குரிய சுண்டுர் இளவரசன் வேறு யாருமல்லன்; அடியேன்தான். கும்ப கர்ணனின் சேவையிலிருந்து விடுபட்டு உள்ளே அறையும் பட்டுவந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த அந்த ராகவரெட்டியார் யார் தெரியுமா? என் அருமைத் தம்பி டி. கே. பகவதி!

நடிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் இவை போன்ற நகைச்சுவைக் கட்டங்கள் மேடையில் அடிக்கடி நிகழ்வதுண்டு. என்ன செய்வது? இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துத்தான் காங்கள் கடிக்க வேண்டும்.

இன்னொரு அற்புதமான கிகழ்ச்சி. இராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். சீதா கல்யாணத்தில், இராமர் சிவதனுசை வளைக்கும்போது அது ஒடிந்து விடுகிறது. ஜானகி, ராமருக்கு மாலை சூட்டுகிருள். இது கதை. சபையில பல அரசர்கள் கூடியிருக்கிறார்க ளல்லவா? அவர்கள் எல்லோரும் முதலில், சிவதனுசை வ8ளக்க முயல்கிறார்கள். யாராலும் முடியவில்லை. எதி: பாராதபடி ஒருகாள் சபையிலிருந்த அரசர் ஒருவா