பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


உடுத்துவதென்றால் கஷ்டங்தானே அத்தான்...... நீங்கள் நான்கு முழ வேட்டியை உடுத்துகிறீர்கள். நாங்கள் பதினறு முழம் புடவையை-உங்களைப் போல் நான்குமடங்கு உடுத்தவேண்டியிருக்கிறதே?

சுந்தரம் பேஷ்...அப்படியா? முற்றிலும் ஜரிகையிடட புடவைகள் உனக்குச் சுமையாகத் தோன்றவில்லை! தங்கத்தால் செய்த கணக்கற்ற நகைகள் கனமாகத் தோனறவிலலை! கதருடை மட்டும் கனமாகப் போய் விட்டதாக்கும்...... 2

மரகதம் : வேடிக்கைக்குச் சொன்னேன் அத்தான்... அக்கிய ஆடையிலை நாம் வருடந்தோறும் எழுபது கோடி ரூபாய்களுக்குமேல் வெளி காட்டாருக்குக் கொடுத்து வருகிருே மென்று தாங்கள் அன்று கடற்கரையில் பிரசங்கம் செய்தது முதல் நான் கதரணியவே விருப்பங்கொண்டேன். அப்பாவின்

கோபத்திற்கு அஞ்சியே உடுத்தவில்லை.......

சுந்தரம் : கண்ணே, மணமறியத் தவறு செய்தல் கூடாது. மனத்தில் கன்மையென்று பட்டபின் செய்வதற்குத் தயங்கலாமா? இனிமேல் கதரே உடுத்துவதாகப் பிரமாணம செய்.

மரகதம் : சரி. இனி அப்பா என்ன சொன்னலும், நான் கதரையன்றி வேறு ஆடைகளைத் தரிப்பதே யில்லை...இது சத்தியம்......

சுந்தரம் : கண்ணே, மெச்சினேன்; மெச்சினேன். இன்று ஒரு பெரிய காரியத்தைச் சாதித்திருக் திறேன். கூடிய சீக்கிரம் உன் தந்தையும் என் வழிக்கு வர பாரததேவி அருள் புரிவாளாக!