பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


இந்த உரையாடல் 1922- ஆம் ஆண்டில் விடுதலைப் போரின் சூழலிலே எழுதப் பட்டது என்பதை நினைவில் கொண்டு பார்க்கவேண்டும்.

அடுத்தபடியாக, விடுதலைப் போரில் வீர முழக்கம் செய்த நாடகம் திரு. வெ. சாமி காத சர்மா அவர்களின் பாணபுரத்து வீரன். இக்காடகம் முதலில் நூலாகவே வெளியிடப்பட்டது. நூல் வடிவில் வெளிவந்த போதே “பாணபுரத்து வீரன் வெள்ளே ஏகாதிபத்தியத்தால் தடை செய்யப்பட்டது

“பாணபுரத்து வீரன் தடை செய்யப் பட்டிருந்த தால், தேச பக்தி’ என நாடகத்திற்குப் பெயர் சூட்டி, 1931-இல் காங்கள் அரங்கேற்றினுேம். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் போராட்டம் கடந்ததுபோல், பாண புரத்துக்கும் ஈசானபுரத்துக்கும் கடக்கும் விடுதலைப் போரை அடிப்படையாகக் கொண்டது தேச பக்தி’ காடகம்.

வீர வாலிசன் ராஜத்துவேஷப் பிரசாரம் செய்த தாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டிலே கிற்கிருன். விசாரணை நடைபெறுகிறது. அப்போது கடக்கும் உரை யாடல் இது:

அதிரதன் : கேட்ட கேள்விக்குப் பதில் உரை. ராஜத்

துவேஷப் பிரசாரம் செய்தது உண்டா இல்லையா?

வலீசன் : ஆம் செய்தேன்.........அரசாங்க முறை கிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு. உங்கள் ஆட்சியின் கீழ், என் காட்டினர் படும் துன்பம் சொல்லத் தரமன்று அல்லும் பகலும் நெற்றி