பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


காய் மூட்டைகளே! வாழத் தெரியாத வீனர்கள் நீங்கள். காங்களோ சிங்கம் போன்ற சூரர்கள்! பொன் விளையும் இப்பூமியைத் தாய் நாடாகக் கொண்டும், தொழில் வளமற்ற தொழும்பர்களாய், தின்று கொழுத்துத் திண்ணைச் சோம்பேறிகளாய் வந்தவர் போனவர்கட்கெல்லாம் உங்கள் காட்டில் இடம் கொடுத்து, கள்ளுண்டு மயங்கிக்கிடந்த உங்களை நல் வழிப்படுத்தி, நாகரிகத்தைப் புகட்டவே இக்காட்டைப் பிடித்தாளத் திட்டமிட்டோம். அது குற்றமா?

இவ்வாறெல்லாம், நாட்டு மக்களின் ஒற்றுமை யின்மையையும் அவல நிலையையும் குத்திக் காட்டிப் பேசுகிருன் சர்வாதிகாரி.

விடுதலைப் போர் வளர்த்த இந்த மேடை நாடகங் களிலே காம் எதனை உருவாக்க விரும்பினேமோ, எதனைப் படைக்க விரும்பினேமோ, அந்தச் சமத்துவ கிலை இன்று உருவாகியிருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பொருளாதார சமத்துவம் ஏற்பட்டு, வறுமையகன்று எல்லோருக்கும் உணவு உடை, உறையுள் கிடைக்கத்தக்க ஒரு புரட்சிகரமான அமைப்பைத் தோற்றுவிக்க காம் தவறிவிட்டோமானுல் பெற்ற சுதந்திரத்தினுல் எவ்விதப் பயனும் இல்லை.

கம்முடைய வருங்காலம் கமக்கு ஏற்றம் தருவ தாகவும் இன்பந்தருவதாகவும் அமைய வேண்டுமென இறைவனே வேண்டி வாழ்த்தி முடிக்கிறேன்.

சென்னே வாருெவி

7-6-1971