பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア

நாடகமும்

தமிழிசையும்

‘காடகமும் தமிழிசையும் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கும்போது, இசைத் துறை யிலும் புலமை பெற்ற நாடகப் பேராசிரியர்கள்-கடிக இசை மேதைகள் பலர் என் கண்முன்னே வந்து நிற் கின்றனர். காரணம், கான் நாடகத் துறையில் புகுந்த 1918 ஆம் ஆண்டில், நாடக மேடையில் பெரும் பகுதி பாடலாகவே இருந்தது; பாடத் தெரியவில்லையென்றால் அக்காளில் நாடகக் குழுக்களில் எவரையும் சேர்த்துக் கொள்ளுவது வழக்கமில்லை.

நாடகத்திலே வரும் எல்லா உறுப்பினர்களுக்கும் பாடல் இருந்த காலம் அது. எனவே, காடக நடிகர் என்றால் பாடித்தான் தீரவேண்டும். இசைப் பயிற்சி அளிப்பதற்கென்றே நாடகக் குழுக்களில் ஆசிரியர்களும் இருந்து வந்தார்கள். அக்கால நாடக கடிக-நடிகை யரில் பலர் சிறந்த இசைப் புலவர்களாக விளங்கிய தையும், இன்றும் புகழோடு இசையரங்குகளில் இடம் பெற்று இருப்பதையும் நான் பார்த்து வருகிறேன். -

ஒப்பற்ற இசை மேதையாக விளங்கிய திரு.எஸ்.ஜி. கிட்டப்பா அவர்களே நாடக மேடையிலே பார்த்து மகிழ்ந்தவர்களில் கானும் ஒருவன். அக்காளில் அவர்