பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பாடிய தமிழ்ப் பாடல்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இனி அந்த இசை மேதையைப் போல் ஒருவர் தோன்ற முடியுமா எனறே ஏக்கம் உண்டாகிறது.

1931ஆம் ஆண்டு. அப்போது நாங்கள் கும்ப கோணத்தில் கடித்துக் கொண்டிருந்தோம். திரு. எஸ். ஜி. கிட்டப்பா எங்கள் அரங்கிலேயே எங்கள் நாடகக் காட்சி அமைப்புகளைக் கொண்டே நடிக்கக்கூடிய வாய்ப்பு கேர்ந்தது. கந்தனர் நாடகம் நடைபெற்றது. ஏராளமான கூட்டம். நாதசுரக் கலையில் கைதேர்ந்த வித்துவான்கள் பலர் முன் வரிசையிலே அமர்ந்திருக் தனர். கதா காலட்சேபக் க9லயில அக்காளில் தலை சிறந்து விளங்கிய ஹரிகேசவ கல்லூர் முத்தையா பாகவதர் அவர்கள் ஆர்வத்தோடு வந்திருகதார். வெளியே சிறிதும் இடமில்லாததால் அரங்கின் உட்புறம் அவருக்கு நாற்காலி போடப்பட்டது. அவரைச் சுறறி காங்கள் பலர் உட்கார்ந்திருந்தோம. அன்று எஸ். ஜி. கிட்டப்பா இசை மழை பொழிந்தார் என்றே சொல்ல வேண்டும். காளைப் போகாமல் இருப்பேனே’ என்ற பாடலில் மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் செய்து கொண் டிருந்தார்; அருகில் அமர்ந்திருநத பாகவதரை காங்கள் பார்த்தோம். அவர் மெய்மறந்து.ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார். மேலே போர்த்தியிருந்த ‘சாதரா'வை எடுத்து விரித்துப் பிடித்துக்கொண்டு ‘ஆஹா போடப்பா போடப்பா; அப்படிப் போடு. நல்ல வேளை. நீ எங்கள் துறைக்கு வராமல் நாடகத்தோடு கிற்கிருயே! காங்கள் பிழைத்தோம். ஈஸ்வரன் உன்னைக் காப்பாற் றட்டும்” என் றெல்லாம் சொலலி, பலவிதமாகப் பாராட் டியதை நாங்கள் பக்கத்திலிருந்து கேட்டோம். திரு. எஸ். ஜி. கிட்டப்பா நாடக மேடையை விட்டு, இசைத்