பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


துறைக்கு வராமல் இருக்க வேண்டுமே என்று இறை வனை வேண்டிக் கொண்டிருந்த வித்துவான்கள் சிலரை யும் கான் அறிவேன். நாடக மேடையில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவருக்கு இசை உலகப் பெரியோர் களெல்லாம் இவ்வளவு பெருமதிப்புக் கொடுத்திருந்தது வியப்புக்குரியதல்லவா?

அண்மையில் அமரரான மதுரை மாரியப்ப சுவாமி களைப் பற்றி நமக்கெலலாம் நன்கு தெரியும். தமிழிசை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே தமிழிசைக்குப் பெருந்தொண்டாற்றியவர். தமிழில் ஆயிரக்கணக்கான அருமையான பாடல்களை இயற்றியவர். அவற்றை இசை நிகழ்ச்சிகளில் தாமே இதயமுருகப் பாடிப் பரவசப் படுத்தியவர். அவரைத் தமிழ் இசை உலகுக்குத் தந்தது, நாடக மாமேதை தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் சமரச சன்மார்க்க நாடக சபை என்பது பலருக்குத் தெரியாது. முன் குறிப்பிட்ட எஸ். ஜி. கிட்டாப்பாவும் அதே நாடக சபையில் சுவாமிகளிடம் பயின்றவர்கள் தாம.

இன்று கம்மிடையே இருந்து தமிழிசை வளர்த்து வரும் திருமதி. கே. பி. சுந்தராம்பாள் அம்மையார், நாடக மேடையில் எஸ். ஜி. கிட்டப்பாவோடு இ8ணயாக கின்று கடித்த நாடகங்களையும், அம்மையாரும் கிட்டப் பாவும் போட்டி போட்டுக்கொண்டு பாடிய பாடல் களையும் நிகழ்ச்சிகளையும் தமிழ் உலகம் இன்னும் மறந்திராதென கம்புகிறேன்.

இசை நாடக ஒளியாகத் திகழ்ந்து பெருமை பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு இசை யரங்குகளில் இருந்துவந்த முதன்மையை யாரும்

நா.-5