பக்கம்:நாடகத் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சமஸ்கிருத நாடகங்களில் நாடகங்களை நடத்தும் ஆசிரியனுக்கு சூத்திரதாரன் என்கிறபெயர் அமைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. பொம்மைகளை சூத்திரங்களைக்கொண்டு எப்படி இயங்கும்படிச் செய்கிறானோ அங்ஙனமே நாடகபாத்திரங்களை ஆட்டி வைப்பவன் என்கிற பொருள் தெற்றெனவே விளங்கும். இக்கூத்திற்கு பதுமையாட்டம் என்று மற்றொரு பெயர் உண்டு. பொம்மைகளை ஆட்டுவிப்போனுக்கு எந்திரி என்று பெயர் முற்காலத்தில் 'தோற்பாவைக்கூத்தும் தொல்லே மரப்பாவை யியக்கமும்' என்று சீவக சிந்தாமணியிற் கூறியிருக்கின்றதைக் காண்க. சில வருஷங்களுக்குமுன் இப்பொம்மைக் கூத்து வழக்கத்திலிருந்தது; தோற்பாவைக் கூத்தைப்போல் இதுவும் வரவர நமது நாட்டினின்றும் மறைந்துகொண்டு வருகிறது. அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த திருவெண்காட்டடிகள் என்று பெயர் பெற்ற பட்டினத்துப் பிள்ளையார் காலத்தில் இப்பொம்மலாட்டம் இருந்ததென்பதற்கு அவர் பாடிய அடியிற்கண்ட பாட்டே சான்றாகும்.

"நாட்டமென்றே இரு சற்குருபாதத்தை நம்பு, பொம்ம
லாட்டமென்றேயிரு பொல்லா வுடலயடர்ந்த சந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்க வீழ்நீ
ரோட்டமென்றேயிரு நெஞ்சே யுனக்குபதேசமிதே'

என்று திருவெண்காட்டடிகள் திருவாய் மலர்ந்திருக்கின்றனர். ஆரியப் பாவை என்பது பாவைக்கூத்து வகையிலொன்றாம்.

வசைக் கூத்து :- இது விதுடக் கூத்தாம். நகைத்திறச் சுவையினையுடையது. வசை என்பது வேத்தியல் பொதுவியல் என்று இருவகைப்படுமெனக் கூறப்பட்டிருக்கிறது. இது புகழ்க் கூத்துக்கு எதிரிடையானது. கடைச்சங்கத்துப் பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனர் செய்த முதல் நூல்களில் வசைக் கூத்தும் உண்டென்றறிகிறோம். இது சமஸ்கிரதத்தில் பிரஹசனம் என்னும் நாடகப் பிரிவினுக்கு ஒப்பாகும். வசைக் கூத்தைப்பற்றி பலவகை யுருவமும் பழித்துக் காட்டவல்லவனாதல், வசையெனப்படுமே: என்று பூர்வ நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

வெறியாட்டு:-தெய்வமேறி ஆடுகின்ற கூத்தாகும். இது தற்காலத்தில் ஆவேசம் வந்து ஆடுகிறது என்று வழங்கப்படுகிறது. முக்கியமாக கிராமதேவதைகளின் கோயில்களில் பூசாரிகள் இந்த வெறியாட்டு ஆடுவதை நாளைக்கும் காணலாம்.

இச்சந்தர்ப்பத்தில் இந்த "எழுவகைக் கூத்தும் இழிகுலத் தோரை ஆடவகுத்தனன் அகத்தியன் தானே' என்று பூர்வாசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/12&oldid=1285065" இலிருந்து மீள்விக்கப்பட்டது