பக்கம்:நாடகத் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அங்கக்கிரியை பதினாறு-சரிகை, புரிகை, சமகலி, திரிகை, ஊர்த்துவகலிகை, பிருட்டகம், அர்த்தபிருட்டகம், சுவத்திகம், உல்லோலம், குர்த்தனம், வேட்டனம், உபவேட்டனம், தானபதப் பிராயவிருத்தம், உக்ஷேபணம், அவக்ஷேபணம், நிகுஞ்சம்.

வருத்தனை நான்கு :- அபவேட்டிதம், உபவேட்டிதம், வியாவர்த்திதம், பராவர்த்திதம்,

கிருத்தக்கை முப்பது:-'சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்பிரகீர்னம், அருத்தரேசிதம், அராள கடகாமுகம், ஆவித்துவத்திரம், சூசிமுகம், இரேசிதம், உத்தான வஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதத்தம், இலதை, கரிக்கை பக்கவஞ்சிதம் பக்கப் பிரதியோகம், கருட்டக்கம், தண்டபக்கம், ஊர்த்துவமண்டலி, முட்டிகச் சுவத்திகம், நளினி,பதுமகோசம், அலுபதுமம், உற்பணம், பக்கமண்டலி, உரோமண்டலி, உரப்பார்சுவார்த்தமண்டலி, இலளிதை, வலிதை ; இதைத்தசன் சம்ஸ்கிருத பரத சாஸ்திரத்தில் : 'ஹஸ்தம்' என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னின்ன ஹஸ்தத்திற்கு இன்னின்ன பொருள் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி அறிய விரும்புவோர் அப் பரதசாஸ்திரத்தில் கண்டு கொள்க.

மேற்கூறிய இலட்சணங்கள் ஒவ்வொன்றும் இன்னது இன்னது என்று இவ்விடம் கூறப் புகிற்பெருகுமாதலால், அவைகளைப்பற்றி ஆராய விரும்புவோர் சுத்தானந்த பிரகாசநூலில் கண்டு கொள்ளும்படி விடுத்தேன். ஆயினும் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு, அதாவது மேற்கூறிய பகுதிகளெல்லாம் பெரும்பாலும் சம்ஸ்கிருதமொழிகளாலும், சம்ஸ்கிருத சொற்றொடர்களாலும், கூறப்பட்டுள்ளன என்பதேயாம்,

மேலும் கூத்துகளின் விலக்குறுப்புகள் பதினான்கு வகைப்படுமென அறிகிறோம். அவை ; பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதமாம்.

இவற்றுள் பொருள் என்பது நான்கு வகைத்தாம் ; அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம். இதையே சம்ஸ்கிருதத்தில் தர்மார்த்தகாம மோட்சம் என்று கூறப்பட்டிருக்கிறதைக் காண்க. இவை நாடகத்திற் பிரிந்தும் கூடியும் வருங்கால் பெயர் வேறுபடும்' எனக் கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார். அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/16&oldid=1285333" இலிருந்து மீள்விக்கப்பட்டது