பக்கம்:நாடகத் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

வரி என இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாருமுள, என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். வரியெனப்படுவது வகுக்குங்காலப் பிறந்ததிலனும், சிறந்த தொழிலும் அறியக்கூறி 'ஆற்றுழி வழங்கல்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

சேதம் :-ஆரியம் தமிழென இருவகைப்பட்டது. 'ஆரியம் தமிழெனும் இரண்டிலும், ஆதிக்கதையை அவற்றிற் கொப்பச் சேதித்திடுவது சேதமெனப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இளங்கோவடிகள் பல்வகைக் கூத்தும் என்று கூறியபின்னர் 'பதினோராடல்’ என்று கூறியுள்ளார். அவை இன்னவை என்று இனி ஆராய்வோம். இதற்கு அடியார்க்கு நல்லார் உரையில் 'கடைய மயிராணி, மரக்கால் விந்தை கந்தன் குடை துடிமாலல் லியமல்கும்பஞ் சுடர்விழியாற், பட்டமதன்பேடு திருப்பாவையரன் பாண்டரங்கங், கொட்டியிவை காண்ப தினோர் கூத்து” என்று கூறப்பட்டிருக்கிறது. இவை தெய்வ விருத்தியாம். இவற்றை இரண்டு கூறாகப் பிரித்துள்ளனர்; அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்ட ரங்கம், மல் ஆகிய அறுவகையை ஒரு கூறாகவும், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்னும் ஐந்தை ஒரு கூறாகவும்; இவைகள் அசுரரைக் கொல்ல அமரர் ஆடின என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாடல்களைப் பற்றிக் கீழ்க்குறித்த விஷயங்களையும் அறிகிறோம் :-

அல்லியம் -மாயவன் (மஹாவிஷ்ணு) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது.

கொட்டி -கொடுவிடையோன் (சிவபெருமான்) ஆடியது- நான்கு உறுப்பு கொண்டது.

குடை -அறுமுகத்தோன் (முருகன்) ஆடியது- நான்கு உறுப்பு கொண்டது.

குடம் -குன்றெடுத்தோன் (கிருஷ்ணன்) ஆடியது- ஐந்து உறுப்பு கொண்டது.

பாண்டரங்கம் -முக்கண்ணன் (சிவபெருமான்) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது.

மல் -நெடியவன் (மகாவிஷ்ணு) ஆடியது- ஐந்து உறுப்பு கொண்டது.

இடி -வேல் முருகன் (சுப்பிரமணியர்) ஆடினது- ஐந்து உறுப்பு கொண்டது.

கடையம் -அயிராணி (இந்திரன் மனைவி) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/19&oldid=1285539" இலிருந்து மீள்விக்கப்பட்டது