பக்கம்:நாடகத் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தண்டனைக்குட்பட்டு, அவயவங்களை இழந்தவனுகி, நொண்டியாய், பிறகு ஒரு தெய்வத்தை அனுசரித்து வழிபட, தன் கைகால்களேப் பெற்றான் என்பதே, எல்லா நொண்டி நாடகங்களும் சற்றேறக்குறைய இம்மாதிரியாகவே இருக்கும். தற்காலம் சென்னையில் ராஜாங்கத்தார் ஏற்படுத்தியுள்ள ஓலைப் புஸ்தகசாலையில், பழனி நொண்டி நாடகம், செய்தக்காதிபேரில் நொண்டி நாடகம் எனும் இரண்டு நாடகங்கள் தமிழ்ப் பாஷையில் ஓலையில் எழுதப்பட்டன வாயிருக்கின்றன. கடைசியில் கூறப்பட்ட நொண்டி நாடகமானது சுமார் இப்போதைக்கு 225 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும்.

பிறகு 'இராமநாடகம்' என்னும் ராமாயணக் கதையைத் தழுவிய தமிழ் நாடகம் உளது. இது 1712 முதல் 1779 வருஷம் வரையில் இருந்த அருணசலக்கவிராயரால் இயற்றப்பட்டது. இது சொற்சுவை, பொருட்சுவை முதலியன மிகவும் அமைந்தது. இதன் முழுப்பெயர் இராம நாடகக் கீர்த்தனை என்றிருந்த போதிலும் நாடக பாணியிலேயே எழுதப்பட்டதென்பதற்குச் சந்தேகமில்லை. மற்ற நாடகங்களிலிருப்பதுபோல் முதலில் கடவுள் வணக்கம், விநாயகர் ஸ்துதி முதலியனவும், முதலில் மங்களமும் தோடயமும் இருக்கிறதைக் காண்க. கட்டியம் வசனம் பொருந்தியது. இடையிடையே நாடகக் கதையைச் சொல்லுமிடத்து, விருத்தங்களை நாடக ஆசிரியர் உபயோகித்திருக்கிறார். இந்நாடக ஆசிரியர் இதைப் போலவே அசோமுகி நாடகம் என்னும் ஒரு நாடகத்தை இயற்றியுள்ளார்.

இராம நாடகத்தைப் போல். பாரதக் கதையை இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் 'பாரதவிலாசம்' என்று இயற்றியுள்ளார். இவரது காலம் அருணசலக் கவிராயருடைய காலத்திற்குப் பிற்பட்டதாகும். இவரியற்றிய மற்ற தமிழ் நாடகங்கள், இரங்கூன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம், தாருகா விலாசம். இதிகாசப் புராணக் கதைகளே யன்றி சரித்திரக் கதையைக் குறித்து தமிழில் எழுதிய நாடகங்களில் இரங்கூன் சண்டை நாடகம்தான் முற்பட்டதென எண்ணவேண்டியிருக்கிறது. இவர் காலத்தில் தமிழ் நாடகங்களுக்கு விலாசம் எனும் பெயர் சாதாரணமாக வழங்கத் தலைப்பட்டதை இங்கு நாம் குறிப்போமாக.

இதற்கு முன்பாக "நீலி நாடகம்" என்ற ஒரு தமிழ்நாடகம் இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அதைப்பற்றி பெயர் அன்றி வேறொன்றும் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/54&oldid=1290148" இலிருந்து மீள்விக்கப்பட்டது