பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் ப‌ஹதூர் ப.சம்பந்த முதலியார்

419



எங்களது நான்காவது நாடகமாகிய அமலாதித்யனை வெள்ளிக் கிழமையில் வைத்துக்கொண்டோம். இதற்குக் காரணம், அந்த நாடகத்திற்கு விஜயம் செய்வதாக ஒப்புக்கொண்ட சிலோன் கவர்னருடைய சௌகர்யமே. எங்கள் சிலோன் நண்பராகிய சர். கனகசபை, கவர்னரிடம் எங்கள் சபையைப்பற்றிப் புகழ்ந்து பேசி, எப்படியாவது ஒரு நாடகத்திற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்று கேட்டதன்பேரில், கவர்னர், வெள்ளிக்கிழமைதான் தான் வருவதற்குச் சௌகர்யப்படும் என்று கூற அன்றைத் தினம், பாஷை தெரியாவிட்டாலும், கதையின் போக்கை எளிதில் அறியக்கூடும் என்று, ஷேக்ஸ்பியர் மகா நாடகக்கவி எழுதிய ஹாம்லெட் என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய அமலாதித்யன் என்பதை வைத்துக்கொண்டோம். கவர்னர் எங்கள் சபை நாடகத்தைப் பார்க்க வருகிறார் என்று வெளியானவுடன், நாடகத் தினத்திற்கு இரண்டு தினம் முன்னதாகவே, நாடகசாலையிலுள்ள நாற்காலிகளெல்லாம் ரிசர்வ் ஆய்விட்டன.

இந்த அமலாதித்யன் நாடகம் நடந்த தினம் நான் சர்.பி.ராமநாதன் அவர்கள் வீட்டில் இருந்தேன். என்னுயிர் நண்பர் ரங்கவடிவேலுவை அங்கு அழைத்துக்கொண்டு போன பிறகு பன்முறை சர்.பி.ராமநாதனுடைய மூத்த குமாரர் என்னையும் அங்கு வந்திருக்கும்படி கேட்டார். நான் எனது மற்ற நண்பர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்களேயென்று மறுத்து வந்தேன். அமலாதித்ய நாடக தினத்திற்கு முந்திய நாள் அவர் மறுபடியும் எனது நண்பர்கள் முன்னிலையில் அவர் கேட்க, அவர்களும், ‘எங்களுக்கு ஆட்சேபணையில்லை. நீ போய் வா’ என்று உத்தரவு கொடுத்தார்கள். அதன்மீது அங்குச் சென்றேன். அங்கு நான் போனது முதல், ஏறக்குறைய நான் இலங்கையை விட்டுத் திரும்பும் வரையில் சர்.பி. ராமநாதனுடைய இரண்டு குமாரர்களும் எனக்குச் செய்த உபசரணையை நான் இப்பொழுது, நினைத்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று வியக்கத்தக்கவனாயிருக்கிறேன். “அகனமர்ந்து செய்யாளுறையு முகனமர்ந்து நல் விருந்தோம்புவானில்” என்று பொய்யாப் புலமைத் திருவள்ளுவர் கூறிய வார்த்தைகள் இவ் வம்சத்தாரிடை