பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நாடக மேடை நினைவுகள்


ரவிக்கை பேட்டுகளும், டோபாக்களும் தயார் செய்தோம். புடவைகள் வாங்க எங்கள் கையில் பணமில்லை. சபை ஆரம்பித்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் ஸ்திரி வேஷதாரிகள் அவரவர்கள் வீட்டிலிருந்தே அவர்கள் வீட்டு ஸ்திரீகளினுடைய புடவைகளைக் கொண்டு உபயோகிப்பது வழக்கம்! மேல் வரைந்துள்ளதில் “டோபா” எனும் பதம் சில நண்பர்களுக்கு அர்த்தமாகாதிருக்கலாம். நாடகமாடும் பொழுது வேஷதாரிகள் தலைமயிருக்குப் பதிலாக அணிவதற்கு டோபாவென்று பெயர். ஆண் வேடம் பூணுபவர்கள் தங்கள் தலைமயிரையே சாதாரணமாகக் கட்டிக்கொள்வார்கள். ஸ்திரீ வேஷம் பூண்பவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யவேண்டுமல்லவா? இந்தத் தலைமயிருக்கு டோபா என்று பெயர். அக்காலத்தில் “பாதி டோபா” தான் பெரும்பாலும் நாடக மேடையில் உபயோகிக்கப்பட்டு வந்தது. சில வருடங்களுக்குப் பிறகுதான், இப்பொழுது வழக்கத்திலிருக்கும் முழு டோபாவானது உபயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்களை நடத்து முன் சென்னையிலுள்ள பெரிய மனிதர்களைக் கண்டு அவர்களுடைய ஆதரணையைப் பெற வேண்டுமென்று தீர்மானித்தோம். அத் தீர்மானத்தின் பிரகாரம் என் தகப்பனாரிடமிருந்து ஒரு காகிதம் வாங்கிக் கொண்டு ராஜா சர் சவலை ராமசாமி முதலியாரைப் போய்க் கண்டேன்; அக்காலத்தில் சென்னையிலிருந்த ஸ்ரீமான்களில் இவர் ஒரு முக்கியமானவர். மிகுந்த தர்ம சீலர்; சென்னபட்டணத்தில் முதல் முதல் பிரயாணிகள் வந்து தங்குவதற்காக சத்திரம் கட்டி வைத்தவர்; தர்மம் செய்வதில் தனது கூர்மையான புத்தியைக் கொண்டு மிகவும் சாதுர்யமாய்ச் செய்வார். அதற்கு உதாரணமாக மேற்குறித்த சத்திரத்தையே கூறலாம். இரண்டு ரெயில் ஸ்டேஷன்களுக்கும் மத்தியில், பிரயாணிகளுக்கு மிகவும் அனுகூலமாயிருக்கும்படி இடம் சம்பாதித்துக் கட்டிய அச் சத்திரம், இன்னும் தினம் எத்தனை நூற்றுக்கணக்கான ஜனங்களுக்கு சவுகரியத்தைத் தருகிறதென்பது பட்டணவாசிகளாகிய என் நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை. இவர் பிரசவ ஆஸ்பத்திரிகள், அம்மை குத்துகிற இடங்கள், மாடுகள் குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தண்ணீர்த்