பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

65


தொட்டிகள் முதலிய ஜனங்களுக்குப் பல சௌகர்யத்தை உண்டுபண்ணும்படியான தர்மங்களைச் செய்துள்ளார். அக்காலத்தில் சென்னையில் தர்ம விஷயமாக ஏதாவது கைங்கர்யம் எடுத்துகொன்டால் இவரது பெயர் அதன் ஜாபிதாவில் முதலில் வராமலிராது! என் தகப்பனாருடைய கடிதத்தை இவரிடம் கொடுத்தனுப்ப, உடனே என்னைப் பரிவுடன் வரவழைத்து, தன் பக்கலில் உட்கார வைத்துக் கொண்டு, எங்கள் சபையைப்பற்றிப் பத்து நிமிஷத்தில், தான் அறியவேண்டிய விஷயங்களை யெல்லாம், சில கேள்வி களால் அறிந்து கொண்டார். யூனிவர்சிடி பட்டம் பெறா விட்டாலும், இவ்விஷயத்தில் இவர் புத்தி சாதுர்யம் மிகவும் மெச்சத் தக்கதே. பிறகு என் வேண்டுகோளுக்கிரங்கி எங்கள் சபையின் பிரசிடெண்ட்டாயிருக்க ஒப்புக் கொண்டதுமன்றி, எனக்கு சபை நடத்த வேண்டிய விஷயங்களில் சில புத்திமதிகளையும் கூறினார். அவைகள் அனைத்தையும் இங்கு நான் கூற வேண்டிய அவசியமில்லை . எனது சிறிய நண்பர்களுக்கு மிகவும் உபயோகப்படும் என்று தோன்றும் ஒன்றை மாத்திரம் இங்கெடுத்துக் கூறுகிறேன். இவர் எழும்பூரிலுள்ள இவரது மாளிகைக்குப் போகுமுன், ஆச்சாரப்பன் வீதியில் எங்கள் வீட்டிற்கு நூறு அடிக்குள்ளதாக இருக்கும் ஒரு வீட்டில் வசித்திருந்தார்; எனது தந்தையாரிடம் இவருக்கு அதிக மதிப்புண்டு. அது பற்றி அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருகிற வழக்கமுண்டு. அப்போது நான் முன்கோபமுடையவன் என்று கவனித்திருக்கக் கூடுமென்று நினைக் கிறேன். அது காரணம் பற்றியோ, அல்லது மொத்தத்தில் இப் புத்திமதியை எனக்கும் கூறவேண்டுமென்றோ “அப்பன், ஒன்று முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள். கழுதையா யிருந்தாலும் நாம் காலைப் பிடிக்கவேண்டிய சமயம் ஒன்று வந்தாலும் வரும். ஆகவே, ஒருவரையும் பகைத்துக் கொள்ளாதே!” என்றார். எனது பத்தொன்பதாம் ஆண்டிலிருந்தபடியால், எனக்கு அப்பொழுது அப்புத்திமதியின் நுட்பம் தெரியாமற் போயிற்று. பிறகு அதைக் கவனியாது நடந்து பல தடவைகளில் துன்பம் அனுபவித்து, பிறகுதான் அப்புத்திமதியின் பெருமையையும் . உபயோகத்தையும் அறிந்தேன்! இன்னும் அப்புத்திமதி என் மனத்தில் நன்றாய் வேர் ஊன்றவில்லை என்றே நான் எண்ண வேண்டியதா