பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

83


கொள்ளுகிறேன். இதனால் இன்னொரு பெரிய அனுகூலமுண்டு. அதென்னவெனில், நமது முன்னோர்கள் கூறும் மூன்று வைராக்கியங்களாகிய, புராண வைராக்கியம், ஸ்மாசன வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்பவைகளோடு, நாடக வைராக்கியம் என்பதையும் சேர்த்து நான்காவது வைராக்கியம் என்பதாகச் சொல்ல வேண்டும். ஒரு நாடகத்தை எழுதி, ஆக்டர்களைத் தயார் செய்து, ஒத்திகைகள் நடத்தி மேடையேற்றுவதென்றால், அக்கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அன்றியும்; ஒரு வேஷம் தரித்து நாடகமாடுவதென்றால் அதன் கஷ்டமும் நடித்த நடனுக்குத் தான் தெரியும். “பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம். பிள்ளை பெறாப் பேதையறிவாளோ?” என்றார் தாயுமானவர். வெளியில் ஹாலில் ஒன்பது மணிக்கு வந்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வேடிக்கையாய் மூன்று அல்லது நான்கு மணி அவகாசம், பாட்டைக் கேட்டு, நடிப்பதைப் பார்த்துச் சந்தோஷித்துப் போகுபவர்களுக்கு, மேடையின் பேரில் நடிக்கும் ஆக்டர்கள் படும் கஷ்டம் என்ன தெரியும்? ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, அந்நாடகப் பாத்திரத்தின் வசனத்தை யெல்லாம் எழுதிக்கொண்டு குருட்டுப் பாடம் செய்து, அதற்குத் தக்க பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்து சிரமப்பட்டு அவைகளைப் பழகி, ஒத்திகைகளுக்கெல்லாம் தவறாமல் காலப்படி போய், ஒத்திகைள் நடத்தும் கண்டக்டர்கள் கூறும் குறைகளை யெல்லாம் பொறுத்து, அவர்கள் வசைகளை யெல்லாம் சகித்து, நாடக தினம் ஆரம்பத்திற்கு மூன்று நான்கு மணி நேரம் முன்னதாக ஹாலுக்குப் போய் க்ஷவரம் செய்து கொண்டு (ஸ்நாநமில்லாமல்), ஒரு மணிசாவகாசத்திற்குமேல் கஷ்டப்பட்டு முகத்தில் வர்ணம் முதலியவற்றைப் பூசிக் கொண்டு, வேஷத்திற்குத் தக்கபடி ஆடை முதலியவற்றை அணிந்து, (சில சமயங்களில் சில ஆக்டர்கள் அனுமார் முதலிய குரங்கு வேஷம் தரிக்க வேண்டுமென்பதை இதைப் படிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார்களாக) நாம் நடிப்பதும் பாடுவதும் வந்திருக்கும் ஜனங்களுக்குத் திருப்திகரமா யிருக்கிறதோ இல்லையோ என்னும் சந்தேகத்துடன், நாலு மணி சாவகாசம் மேடையில் நடித்து, நாடகத்தை முடிக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும், நாடகம் முடிந்தவுடன் தன்