பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நாடக மேடை நினைவுகள்


தலையிலிருந்த பெரும்பாரம் நீங்கியது போலத்தான் தோன்றும் என்பதற்குச் சிறிதேனும் சந்தேகமில்லை. கடைசியாக ஒரு முக்கியமான கஷ்டம் ஒன்றைச் சொல்ல மறந்தேன். வேஷம் போட்டுக் கொள்வதற்கு ஒரு மணி சாவகாசமானால் அதை ஒழிப்பதற்கு அரைமணி சாவகாசமாகும்! சில சமயங்களில் கிருஷ்ணவேஷம் புத்தர் வேஷம் முதலிய வேஷம் தரிப்பவர்கள், ஏறக்குறைய உடல் முழுவதும் வர்ணம் தீட்டிக்கொள்ள வேண்டியிருந்தால், அந்த வர்ணமானது மறுநாள் காலை எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நாநம் செய்தால்தான் போகும்!

களைத்து அலுத்துப் போயிருக்கும் பொழுது வேஷத்தை அழிக்க வேண்டிய சமயத்தில் எத்தனையோ ஆக்டர்கள் “அப்பா! இனி இந்தத் தொல்லை வேண்டாம்! மறுபடியும் நான் அரங்கத்தின் பேரில் ஏறுகிறேனா பார்” என்று சொல்லியதைப் பன்முறை கேட்டிருக்கிறேன். எனக்கும் அவ்வண்ணம் பன்முறை தோன்றியிருக்கிறது. ஆயினும் மற்ற வைராக்கியங்களைப்போல் இந்த வைராக்கியமும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மறைந்து போம். இப்படி மறப்பதற்கு மிகவும் அநுகுணமான விஷயங்களில் இந்த “பகோடா மீடிங்” ஒன்றாம்! பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்து, வேடிக்கையாகப் பேசி, பகோடா சாப்பிட்டு விட்டு, சந்தோஷமடைந்த பின், “உம் -அப்புறம் - பிறகு என்ன நாடகம் எடுத்துக்கொள்வோம்!” என்று மெல்லப் பேச ஆரம்பிப்பது வழக்கம்! அவ்வாறு எங்கள் முதல் பகோடா மீடிங்கிலும் கடைசியில் வீட்டிற்குப் புறப்படுமுன் யாரோ ஒருவர் “பிறகு என்ன நாடகம் போடுவது?” என்கிற கேள்வி கேட்டார்.

மேற்சொன்ன இரண்டு நாடகங்களுள் “சுந்தரி” என்பது எங்கள் சுகுண விலாச சபையில் மறுபடியும் முழு நாடகமாக ஆடப்படவேயில்லை. “புஷ்பவல்லி”யும் அப்படியே. இதில் இரண்டு காட்சிகள் மாத்திரம் சபையின் நவராத்திரி கொண்டாட் டத்தில் ஒருமுறை பிறகு ஆடப்பட்டதென்பது என் ஞாபகம். ஆயினும் இவ்விரண்டு நாடகங்களும் பெங்களூரில் 1896ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட சுகுண விலாச சபையின் கிளைச் சபையிலும், இன்னும் இதர சபைகளிலும் சில முறை ஆடப்பட்டிருக்கின்றன. இருந்தும், நான் எழுதிய நாடகங்