பக்கம்:நாடும் ஏடும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அக்கினியாஸ்திரம் வாயுவாஸ்திரங்கள் எங்கே?

மேலும் தற்காலத்திலேயுள்ள குண்டு, தீக்குண்டு முதலியனவெல்லாம் பழையகால வாயுவாஸ்திர அக்கினியாஸ்திரங்கள் தான் என்று வீண் பெருமை பேசுகின்றனர். அத்தகைய அஸ்திரங்கள் அந்தக் காலத்தில் இருக்தனவோ? இல்லையோ? என்பது ஒருபுறமிருக்கட்டும், அவை நமக்குத் தெரியா. ஆனால் இக்காலத்தில் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அவைகளைக் காணலாம். எங்கு? ஏழை பாட்டாளிகளின் வீட்டில். ஏழை பாட்டாளி நாளெல்லாம் உழைத்து நலிந்து மாலையில் ஆயாசம் தீர அமுதரசத்தைப் (கள்ளை) பருகி ஆனந்தமாக உள்ளே நுழைந்து அவன் தனது மனைவியை அறையும் அறைதான் அக்கினியாஸ்திரம். அதைப்பெற்று அவள் அழுவதால் வழியும் கண்ணீர் நமக்கு வருணாஸ்திரத்தின் வனப்பை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. அதைக்கண்டு அக்குடியன் விடும் பெருமூச்சே வாயுவாஸ்திரமாகும். இத்தகைய அஸ்திரங்களைத் தான் அன்றாட வாழ்க்கையிற் காண்கின்றோம்; தீக்குண்டு அக்கினியாஸ்திரத்தைக் கண்டு உண்டாக்கியது என்று கூறுவது அறியாப் பாலகரும் எள்ளி நகையாடத் தக்க ஏமாற்றும் வித்தை. புதியனவெல்லாம் நம் நாட்டுப் பழம் பெரும் பொக்கிஷங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்று பேசிப் பூரிப்பதிலே பெருமை ஏதாவது உண்டா இல்லை, முக்காலும் இல்லை. இதனால் வீண் வீறாப்பு பெருகுகிறது; மதி தேய்ந்து மந்த மடைகிறது. அறிவு அசட்டை செய்யப்படுகிறது. பழையனவற்றில் பெருமை உண்டு; புதியனவெல்லாம் பழமையைக் கண்டு தான் செய்தவை என்றாலும் அவை இன்று எங்கே? எங்கே எங்கே என்று கேட்கின்றேன். அந்நியனிடம் சோரம் விட்டு அண்ணாந்து ஆர்ப்பாட்டம் செய்கிறாயே அது உனக்குப் பெருமையா? சிறுமையா? உன் நாட்டிலே இருந்தது என்று உரத்து உரத்துப் பேசுகின்றாயே அந்த வீரம் இன்று எங்கே? எங்குப்போய் ஒளிந்தது? சமத்துவம் பண்டைய ஏடுகளிலே சரமாரியாகப் பரவிக் கிடக்கின்றதென்கின்-

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/42&oldid=1547560" இலிருந்து மீள்விக்கப்பட்டது