பக்கம்:நாடும் ஏடும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யுள்ள கண்ணாடிகளின் நேர்த்தியென்ன; என்று இன்னும் பலப்பல பேசுவான். முடிவிலே, "அது ஒரு காலத்திலே நம்மிடமிருந்த மனைதான்; அப்பொழுதிருந்த சீரும் சிறப்புமென்ன; என்னை இவன் ஏமாற்றி இம்மனையைப் பறித்துக் கொண்டான்; இருந்தாலும் நான் அநுபவித்து ஆண்ட அரண்மனை தானே" என்று உள்ளம் நெகிழ்வான்; உற்சாகம் காட்டுவான். இதுபோன்ற தன்மைதானே நம் தற்காலப் பழம் பெருமை பேசும் வீரர்களின் செயல்.

மிக நல்ல உவமை

இன்னும் சற்று விளங்க உரைக்க வேண்டுமானால், சான்று சற்றுக் கடுமையாக இருக்கும் என்றபோதிலும் உங்கள் மன்னிப்பு கிடைக்கும் என்ற மனப்பான்மையோடு ஒன்று கூறுகின்றேன். சோலையிலே இருவர் உல்லாசமாக உலவுகின்றனர். உரையாடல் மிக உன்னதமாயிருக்கின்றது. இருவரும் இளவயதினர்; இளமை விருந்தை நுகர்கின்றனர் வசந்தகாலத்திலே. ஒருவர் ஆண்; மற்றொருவர் பெண். மனமொத்த காதலர்கள் என்று தான் மாசற்ற மனத்தினர் எண்ணுவர்; அது சமயம் இருவர் அவ்வழியே வருகின்றனர். அழகான இக்காட்சியைக் கண்டு களிப்படைகின்றனர். ஆனால் இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து "என்ன ஐயா! எதோ ஒரு மாதிரி பார்க்கிறீர்; எல்லாம் எம்மிடமிருந்ததுதான் அவள் யாரோவென்று நினைக்காதீர் அவனோடு சல்லாபமாக இருக்கின்றாளே என்று. அவள் என்னுடைய மனைவியாக இருந்தவள்தான்! அவள் அழகென்ன அற்புத குணமென்ன! எனக்கும் அவளுக்கும் இருந்த பொருத்தம் தான் என்ன என்று எக்காளமிடுவதற்கு ஒப்பாகுமென்று கூறுகின்றேன். தப்பிதமான முறையல்லவா? நேர்மையோடு நினைத்துப் பாருங்கள் நேயர்களே!

பெரும் பெரும் பண்டிதர்களும் புலவர்களும் நாவலர்களும் இத்தகைய பழம் பெருமையில் பாசம் வைத்து நாட்டைக் கருதாமல் ஏடுகள் செய்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனரே. இந்த நிலைகண்டு என் மனம் பெரிதும் வருந்து-

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/44&oldid=1547562" இலிருந்து மீள்விக்கப்பட்டது