பக்கம்:நாடும் ஏடும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கின்றது; எண்ணத்தில் ஏக்கம் உண்டாகிறது; என்று நீங்கும் இந்த வீண் பெருமையென்று சிந்தித்த வண்ணமே இருக்கின்றேன் காலம் இதனை மாற்றும். வருங்கால உலகம் இதற்கோர் வழிகோலும் என்ற நம்பிக்கைதான் மேலும் மேலும் சலியாதுழைக்க ஊக்குகின்றது. உரிமைக்காக, மக்களின் வாழ்க்கை உரிமைக்குப் போரிடும் உணர்ச்சியில் உள்ளம் ஊடுருவிச் செல்கின்றது.

அநுமான் சொற் செல்வனாம்

சமீபத்தில் நான் ஒரு பண்டிதருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அதுபோழ்து உலகிற் சிறந்த சொற்செல்வர்கள் யாவர் என்ற விவாதம் ஏற்பட்டது. பண்டிதர் பதட்டமின்றிக் கூறினார் டெமாஸ்தனிஸ், பர்க், அநுமான் ஆகிய மூவரும் சொற்செல்வர்கள் என்று. அனுமான் சிறந்த சொற்செல்வனாம் இது கேட்டு என் நிலை கலங்கிற்று. பழமை மோகம் பண்டிதர்களின் பகுத்தறிவை எத்துணை பாழ்படுத்தியுள்ளது; பாழ்படுத்துகின்றது என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணானேன். என் செய்வது? டெமாஸ்தனிஸ் சிறந்த சொற்செல்வன் என்பதை ஒப்புக் கொள்ளலாம். பர்க் விஷயத்தில்கூட சிறிது ஐயப்பாடு நேர்கிறது. "பர்க் பேசுகின்ற பொழுது உணவுக்கு மணி அடிக்கிறது" என்ற வாசகம் நினைவிற்கு வருகின்றது. பர்க் பேசுவதில் வல்லவன், ஆனாலும் கேட்போர் உள்ளத்தைத் தன்பால் திரும்பும் திறமற்றவன் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் கடல்தாண்டிச் சீதையின் இருப்பிடமறிந்து இலங்கையைக் கொளுத்தின அநுமனையும் இவ்வரிசையில் சேர்ப்பது என்பதை நினைக்குந்தோறும் நகைப்பு மேலிடுகின்றது. அனுமானது திருவுருவப் படத்தைப் பார்க்கும் எவராவது அவனது வாய் வனப்பைக் காணும் எவராவது அநுமானும் சொற்பெருக்காற்றவலன் என்று நினைப்பரோ? நினைக்கத்தான் இடமிருக்கின்றதா? தாடைகளின் அமைப்பைக் காணும்போது உடல்நூல் வல்லார் தம் சிந்தனைக்கு விருந்தாகும் கேள்வி இது. தாடைகளின் அமைப்பை

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/45&oldid=1547563" இலிருந்து மீள்விக்கப்பட்டது