பக்கம்:நாடும் ஏடும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுத்து சொற் செல்வன் என்று கொண்டாலும் கொள்வோம். உலகச் சொற்பொழிவாளர் வரிசையிலே அநுமானும் ஒருவன் என்று பிரதேசத்தவர் கேள்விப்பட்டு நம்மை "உங்கள் சொற் செல்வன் அநுமனின் சொற்செல்வங்கள் எங்கே? சொற்பெருக்கங்கள், சொற்போர்கள், அறிவுரைகள், அறவுரைகள், ஆராய்ச்சித் தொடர்கள் எங்கே? நாங்கள் காணவேண்டும் அவனுடைய ஆற்றலை; எடுத்துக் காட்டுங்கள் அவனுடைய ஏடுகளை" என்று கேட்டால் இதற்கு யாது விடை பகர்வர் எம்மனோர், எம்புலவர் பெருமக்கள் ? ஏதாவது இருந்தால்தானே பதில் வரும். கம்பன் கவிதைபால் கரைகாணாக் காதல் கொண்டு நாட்டு வளப்பமறியாத கவிதா ரத்தினங்களால் காணப்படும் சொற்செல்வர் வேறு எவ்வித மிருப்பர்?

செய்யத்தக்க வேலைகள்

இக்கால பண்டித மணிகள் பழமை விரும்பிகள் பழமையில் உள்ள புன்மையை விடுத்து கருத்துக்குக் களங்கம் விளைக்கும் இடங்களை எடுத்து மக்களுக்குப் பயன்படுமாறு அவற்றைச் செய்து தரலாகாதா? நீதிபற்றித் தனி ஏடு ஒன்று அமைக்கலாம். அதிலே பல புலவர்களின் கருத்தையும் ஒருங்கு திரட்டிக் குவிக்கலாம். காதல்பற்றித் தனி ஏடு செய்யலாம். அதிலும் பல பண்டிதர்களின் கருத்துக்கள் இடம் பெறச் செய்யலாம். அதுபோலவே நட்பு, மதம், போர் அரசாட்சி முதலியனபற்றிய விழுமிய கருத்துக்களைப் பண்டைய ஏடுகளிலிருந்து எடுத்துத் தனித்தனியே தொகுத்து மக்களிடை பரப்பலாகாதா? இதுபோன்றே, தொல்காப்பியம், திருக்குறள் இவற்றையும் உரைகளையும் சிறு சிறு தொகுதிகளாக வெளியிட முடியாதா? பலரின் மாறுபட்ட கருத்துக்களையும் அவற்றில் தெளிவுறப் பொறிக்கலாகாதா? அதனைக் காணும் மக்கள் எது நன்றோ அதனைக் கொள்வர். தத்தம் கருத்திற்கேற்ப பழமை போகக் கூடாது எனக் கச்சையை வரிந்து கட்டுவோர் இம்முறையைக் கோடல் முறை, அதுவன்றிப் பழமையைப் பாகுபடுத்தி பகுத்தறிலோடு பார்க்கத் துணிவின்றேல்

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/46&oldid=1547564" இலிருந்து மீள்விக்கப்பட்டது