பக்கம்:நாடு நலம் பெற.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தீமைகள் நடைபெறுகின்றன. இவையனைத்தும் நீங்கிச் சமுதாய ஒற்றுமை - சமயத்தின் சமரசம் காண்பதே மனித நேயமாகும் இந்த அடிப்படைக்குத் தேவையான தூய உடல் ஓம்பலும், தாம் இன்புறுவது உலகின்புறக்கா னும் கல்வியும், இவற்றோடு இணைந்த சமுதாயப் பழக்க வழக்க பண்பாடுகளும் சிறக்க வேண்டும் என்ற நிலையிலே இந்நூலில் மூன்று கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. இவற்றுள் சிலவிடங்களில் சில செயல்களை வன்மையாகக் கூடக் கண்டித்திருப்பேன். ஆயினும் அவை தனிப்பட்ட முறையில் யாரையும் பழிக்க வேண்டுமென்றோயாருடைய மனமும் புண்பட வேண்டுமென்றோ எழுதப் பெற்றவையல்ல. எப்படியாயினும் அல்லவை நீங்கி, நல்லவை நிறைந்து நாடு நாடாக, உலகு உலகாக உயர வேண்டும் என்பதே என் கருத்து. எனவே இவ்வெழுத்துக் களில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னித்து நாடு நலம் பெற நல்வழி காண அனைவரையும் வேண்டிக் கொள்ளு கிறேன். இந்நூலை அச்சிடும் போது பிழைகளை ஒப்பு நோக்கி, பிழை திருத்தி உதவிய பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சா. வளவன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து வாழ்த்துகிறேன். இந்தப் பொங்கல் நன்னாளில் நலம் பொங்க-வற்றா வளம் பொங்க - பண்பாடு சிறந்தோங்க - மக்கள் ஆக்க நெறி பற்றி அன்புளம் கொண்டு சிறக்க வாழ்த்துகின் றன். வாழ்க வையகம்! வளர்க மனிதப் பண்பு. இந்நூல் வெளிவரக் காரணமாயமைந்த அனைவருக் கும் - இதழ்களுக்கும் நிறுவனங்களுக்கும் பிறருக்கும் என் நன்றியும் வணக்கமும். தமிழ்க்கலை e-) பணிவுள்ள, சென்னை - 30. . மு. பரமசிவானந்தம் 15.1.1996. «9. (ք £5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/10&oldid=782337" இலிருந்து மீள்விக்கப்பட்டது